
யார் இவர்?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டர்
கல்வித் தகுதி:
மும்பை பல்கலை கழகத்தில் பி.இ.
விருப்பம்:
கார், திரைப்படம், இசை இவை இவருடைய விருப்பங்கள்
இவரது சிறப்பு:
முகேஷ் அம்பானி என்றால் இந்தியாவில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். இவருக்கு முன்னுரையே தேவையில்லை. அதிலும் குறிப்பாகச் சமீபத்தில் இந்தியா முழுவதுமே ஜியோ என்ற வார்த்தையை அதிகம் உச்சரிக்கக் காரணமாக அமைந்தவர்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் ஒரு புரட்சியை உருவாக்கும் வகையில் 4ஜியை கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்தார். மிகக் குறைந்த காலத்தில் ஜியோவுக்கு 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைந்ததே இவருடைய வெற்றியை உறுதி செய்தது. இலவச டேட்டா, இலவச அழைப்பு, இண்டர்நெட் வேகம் ஆகியவை ஜியோவை இந்தியர்களில் பலர் தேர்வு செய்யக் காரணம்.
22 பில்லியன் டாலர் பணத்தை ஜியோவில் முதலீடு செய்துள்ளார் முமேஷ் அம்பானி. இந்திய தொலைத்தொடர்பு துறை இவருடைய நிறுவனத்தால் அடுத்தக் கட்டத்திற்கு இன்னும் சில ஆண்டுகளில் போய்ச் சேரும் என்பது உறுதி


Click it and Unblock the Notifications