இன்று காலையில் வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்தே சென்செக்ஸ் இறக்கம் காணத் தொடங்கிவிட்டது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 497 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன் அரசியல் நண்பர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இந்தியா வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நேரம் பார்த்து, இந்திய பங்குச் சந்தைகள் தட தடவென சரிந்து கொண்டு இருக்கின்றன. எவ்வளவு சரிந்து இருக்கிறது. ஏன் சந்தை சரிகிறது போன்றவைகளைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
காரணங்கள்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சுமாராக 71.79-க்கு வர்த்தகமாகி வருகிறது. இது போக கொரோனா வைரஸ் பயம் இன்னும் சந்தையைப் பிடித்து இருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஃப்யூச்சர்ஸ் வேறு காலாவதி ஆக இருப்பதால் சந்தையில் ஒரு வித பதற்றம் நிலவிக் கொண்டு இருக்கிறதாம்.
எவ்வளவு சரிந்து இருக்கிறது
கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாள் மாலை சென்செக்ஸ் 41,170 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,037 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், அடுத்த சில நிமிடங்களில், சென்செக்ஸ் தன் இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளிகளை நோக்கி சரியத் தொடங்கிவிட்டன. இன்றைக்கு அதிகபட்சமாக 40,678 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக 497 புள்ளிகள் சரிவைத் தொட்டு இருக்கிறது சென்செக்ஸ்.
நிஃப்டி
கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாள் மாலை நிஃப்டி 12,080 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 12,012 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 11,923 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக நிஃப்டி 157 புள்ளிகள் சரிவைச் சந்தித்து இருக்கிறது.
30 பங்குகள்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 2,082 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 738 ஏற்றத்திலும், 1,228 பங்குகள் இறக்கத்திலும், 121 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
52 வார உச்சம்
மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் மொத்த 2,082 பங்குகளில், 48 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 94 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஏற்ற இறக்கம்
இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, சன் பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், ஏஷியன் பெயிண்ட்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஹிண்டால்கோ, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், வேதாந்தா, ஓ என் ஜி சி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications