கடந்த பிப்ரவரி 24, 2020 அன்று சென்செக்ஸ் 807 புள்ளிகள் சரிந்த போது 40,500 என்கிற வலுவான லெவல்களை உடைத்துக் கொண்டு கீழே வந்துவிட்டது என கவலைப்பட்டோம். ஆனால் இன்று சென்செக்ஸ் தன் மற்றும் ஒரு பெரிய வலுவான லெவலை உடைத்துக் கொண்டு சரிந்து இருக்கிறது.
கடந்த அக்டோபர் 30, 2019-ல் இருந்து சென்செக்ஸ் இந்த 40,000 என்கிற புள்ளியை மிக வலுவாக பிடித்து இருந்தது. இந்த தேதிக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 01 மற்றும் 02 2020 ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் தான் சென்செக்ஸ் தன் 40,000 என்கிற புள்ளிகளுக்கு கீழ் இறங்கி வந்து வர்த்தகம் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று தான் மீண்டும் சென்செக்ஸ் தன் 40,000 புள்ளிகளுக்குக் கீழ் வந்து நிறைவடைந்து இருக்கிறது.
நேற்று மாலை சென்செக்ஸ் 40,281 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,194 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. கேப் டவுனில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், அடுத்த சில நிமிடங்களில், சென்செக்ஸ் தன் இன்றைய நாளுக்கான குறைந்தபட்ச புள்ளிகளை நோக்கி சரியத் தொடங்கிவிட்டன. இன்றைக்கு அதிகபட்சமாக 39,760 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. மீண்டும் கொஞ்சம் தேறி, 39,888 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஆக 392 புள்ளிகள் சரிந்து இருக்கிறது சென்செக்ஸ்.
அதே போல, நேற்று மாலை நிஃப்டி 11,797 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 11,738 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 11,678 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நிஃப்டி இன்று 119 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 7 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,608 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 808 பங்குகள் ஏற்றத்திலும், 1,655 பங்குகள் இறக்கத்திலும், 145 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின.
மும்பை பங்குச் சந்தையான பி எஸ் இ-யில், வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும் மொத்த 2,608 பங்குகளில், 58 பங்குகளின் விலை 52 வார அதிக விலையிலும், 251 பங்குகளின் விலை 52 வார இறக்க விலையிலும் வர்த்தகமாயின.
யெஸ் பேங்க், பார்தி ஏர்டெல், எஸ் பி ஐ, பிரிட்டானியா, ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. கெயில், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, ஹிண்டால்கோ போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications