காலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, 1000 புள்ளிகள் சரிவு, 1,500 புள்ளிகள் சரிவு என, கடந்த சில வாரங்களாக, படித்துப் பழகியவர்களுக்கு, ஆறுதல் கொடுக்கும் விதத்தில் இன்று சென்செக்ஸ் சுமாராக 640 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. இதுவே பெரிய சரிவு என்றாலும், முந்தைய நாட்களின் சரிவை விட இது குறைவு என்பது தான் ஒரே ஆறுதலான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை சென்செக்ஸ் 31,611 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, தற்போது 30,747 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இன்றைய குறைந்தபட்ச புள்ளியாக 30,747 புள்ளிகளைத் தொட்டு இருக்கிறது. ஆக நேற்றைய குளோசிங் புள்ளியான 31,390 புள்ளியில் இருந்து இன்றைய குறைந்தபட்ச புள்ளியான 30,747 புள்ளிகளைத் கழித்தால் சுமாராக 640 புள்ளிகள் சரிந்து இருக்கிறது சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி தற்போது 9,047 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சுமார் 150 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகி வருகிறது நிஃப்டி.
நேற்று மார்ச் 16, 2020, அமெரிக்காவின் நாஸ்டாக் 12 % சரிந்து இருக்கிறது. லண்டனின் எஃப் டி எஸ் இ 4.01 %, பிரான்ஸின் சி ஏ சி 5.75 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 5.31 % சரிந்து இருக்கின்றன.
இன்று மார்ச் 17, 2020, ஆசியாவில் பெரும்பாலான சந்தைகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் 4.55 % சரிந்து இருக்கிறது. தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 2.01 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 13 பங்குகள் ஏற்றத்திலும், 17 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 921 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 362 பங்குகள் மட்டுமே ஏற்றத்திலும், 530 பங்குகள் இறக்கத்திலும், 29 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
யெஸ் பேங்க், டாடா ஸ்டீல், ஈஷர் மோட்டார்ஸ், வேதாந்தா, சன் பார்மா போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. யூ பி எல், ஹெச் டி எஃப் சி, பார்தி இன்ஃப்ராடெல், ஹெச் டி எஃப் சி பேங்க், ஜி எண்டர்டெயின்மெண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications