சென்செக்ஸ் சார்ட்டைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு சென்செக்ஸ் சரிந்து கொண்டே போகிறது.
கடந்த 22-03-2017 அன்று சென்செக்ஸ் 29,137 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது சென்செக்ஸ். இது தான் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸின் மிகக் குறைந்த புள்ளியாக இருந்தது.
22-03-2017-க்குப் பின் ஒரு முறை கூட சென்செக்ஸ் 29,137 என்கிற புள்ளியைத் தொட்டதில்லை. ஆனால் இன்று மதியம் சென்செக்ஸ் 29,132 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் சுமாராக நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 1440 புள்ளிகள் சரிந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியின் குறியீடு இன்று காலை 9,088 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, தற்போது 361 புள்ளிகள் சரிவில் 8,605 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸைப் போலவே நிஃப்டியும் தன் வாழ்நாளில் காணாத சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
13,000 புள்ளிகள் சரிவு
சென்செக்ஸ் கடந்த ஜனவரி 20, 2020 அன்று தன் வாழ்நாள் உச்சப் புள்ளியான 42,273 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் இன்று, 29,132 என கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய சரிவைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக சென்செக்ஸ் சுமாராக 13,141 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.
நிஃப்டி துறைகள்
இன்று நிஃப்டியில் இருக்கும் துறை சார் இண்டெக்ஸ்களில் தனியார் வங்கிகள் மற்றும் நிதி சேவைகள், வங்கி இண்டெக்ஸ் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் பயங்கரமாக அடி வாங்கி இருக்கின்றன. இவை எல்லாமே சுமார் 6 சதவிகிதத்துக்கு மேல் சரிந்து இருக்கின்றன. எஃப் எம் சி ஜி இண்டெக்ஸ் தான் இருப்பதிலேயே குறைவாக (-1.31%) அடி வாங்கி இருக்கிறது.
ஐரோப்பிய சந்தைகள்
லண்டனின் எஃப் டி எஸ் இ 4.59 %, பிரான்ஸின் சி ஏ சி 4.06 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 4.61 % என சரிவு கண்டு வர்த்தகமாகி இருக்கின்றன. ஆசிய சந்தைகளும் காலை ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது தாய்லாந்தைத் தவிர மற்ற சந்தைகள் எல்லாமே இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
உலக காரணிகள்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமாராக 74.36 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 29.76 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அமெரிக்க சந்தைகள் வர்த்தகமாகத் தொடங்கினால் இன்னும் என்ன ஆகுமோ தெரியவில்லை.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications