806 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்! 1,772 பங்குகள் விலை சரிவு!

மும்பை பங்குச் சந்தையின், பெஞ்ச்மார்க் 30 இண்டெக்ஸான சென்செக்ஸ், தற்போது சுமாராக 806 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.

இன்று காலை வர்த்தக நேர தொடக்கத்திலேயே கொஞ்சம் இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 806 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.

காலை நேரத்திலாவது சென்செக்ஸ் 40,500 என்கிற வலுவான சப்போட்டின் மீது இருந்தது. ஆனால் வர்த்தக நேர முடிவில் 40,363-க்கு சென்செக்ஸ் நிறைவடைந்து இருக்கிறது.

சென்செக்ஸ் டெக்னிக்கல்

சென்செக்ஸ் டெக்னிக்கல்

கடந்த பிப்ரவரி 01, 2020 அன்று, பட்ஜெட் தாக்கல் செய்த போதே சந்தை சுமார் 1,000 புள்ளிகள் சரிந்தது. அதனைத் தொடர்ந்து கொஞ்சம் ஏற்றம் கண்டாலும், மீண்டும் சென்செக்ஸ் சரிந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் 40,500 என்கிற சப்போட்டை உடைத்தது தான். எனவே சென்செக்ஸ் மேற்கொண்டு இறக்கம் காண வய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

நிஃப்டி

நிஃப்டி

கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாள் மாலை நிஃப்டி 12,080 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. இன்று காலை நிஃப்டி 12,012 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 11,838 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. நிஃப்டி இன்று 242 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.

சென்செக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிலவரம்

சென்செக்ஸின் 30 பங்குகளில் 00 பங்குகள் ஏற்றத்திலும், 30 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,698 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,772 பங்குகள் ஏற்றத்திலும், 746 பங்குகள் இறக்கத்திலும், 180 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 30-க்கு 30 பங்குகளும் சரிவது எல்லாம் மிகவும் கொடுமையான விஷயம்.

துறை சார் இண்டெக்ஸ்

துறை சார் இண்டெக்ஸ்

நிஃப்டியின் செக்டோரியல் இண்டெக்ஸ்களில் நிஃப்டி ஆட்டோ 3.51 %, நிஃப்டி மெட்டல் 5.36 %, நிஃப்டி பார்மா 3.09 %, நிஃப்டி பொதுத் துறை வங்கிகள் 2.78 % என பலத்த சரிவைச் சந்தித்து இருக்கின்றன. எல்லா துறை சார் இண்டெக்ஸ்களும் சரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள்

ஆசிய சந்தைகள் காலையில் சொன்னது போலவே எல்லா பெரிய நாட்டு பங்குச் சந்தைகளும் சரிவில் தான் இருக்கின்றன. தாய்லாந்தின் எஸ் இ டி காம்போஸைட் -3.98 %, தென் கொரியாவின் கோஸ்பி -3.87 % என பலத்த சரிவைச் சந்தித்து இருக்கின்றன. மிக குறைந்த சரிவு என்றால் அது சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தான் வெறும் 0.28 % சரிவைச் சந்தித்து இருக்கிறது.

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா

ஐரோப்பாவில் லண்டனின் எஃப் டி எஸ் இ 3.26 %, பிரான்சின் சி ஏ சி சந்தை 3.65 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 3.48 % என ஒட்டு மொத்த ஐரோப்பிய சந்தைகளும் சின்னா பின்னமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒரு சதவிகித பங்குச் சந்தை சரிவு என்றாலே பதறும். இதில் 3 சதவிகித சரிவு என்றால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+