சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. இந்த 200 புள்ளிகள் ஏற்றமும் நிலையாக இல்லாமல் தடாலடி ஏற்ற, இறக்கங்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
Recommended Video
மார்ச் 17, 2020, செவ்வாய்க் கிழமை அன்று சென்செக்ஸ் சுமாராக 810 புள்ளிகள் சரிந்து 30,579 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 30,968 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி 31,101 புள்ளிகளைத் தொட்டது.

ஆனால் தற்போது சுமாராக 30,780 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்று, சென்செக்ஸ் குறைந்தபட்ச புள்ளியாக , நேற்றைய குளோசிங் புள்ளியான 30,579 புள்ளிகளுக்குக் கீழ் செல்லவில்லை. இண்ட்ரா டே லோ புள்ளியே 30,591 என பெரிய ஆறுதலைக் கொடுத்து இருக்கிறது சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி தற்போது 9,021 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. சுமார் 54 புள்ளிகள் ஏற்றாத்தில் வர்த்தகமாகி வருகிறது நிஃப்டி.
நேற்று மார்ச் 17, 2020, அமெரிக்காவின் நாஸ்டாக் 6.23 % ஏற்றம் கண்டு இருக்கிறது. லண்டனின் எஃப் டி எஸ் இ 2.79 %, பிரான்ஸின் சி ஏ சி 2.84 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 2.25 % ஏற்றம் கண்டு இருக்கின்றன. கொரோனா வைரஸுக்கான மருந்தை பரிசோதிக்க இருக்கும் செய்தியால் பல நாட்டு சந்தைகளும் ஏற்றம்காண வாய்ப்பு இருப்பதாக நேற்றே பங்குச் சந்தை செய்தியில் சொல்லி இருந்தது குறிப்பிடத்தகக்து.
இன்று மார்ச் 18, 2020, ஆசியாவில் பெரும்பாலான சந்தைகள் ஏற்றாத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதிகபட்சமாக தாய்லாந்தின் எஸ் இ டி காம்போசைட் 2.79 % ஏற்றாத்தில் வர்த்தகமாகி வருகிறது. குறைந்தபட்சமாக இந்தோனேசியாவில் ஜகர்தா காம்போசைட் 1.20 % சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 16 பங்குகள் ஏற்றத்திலும், 14 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. பிஎஸ்இ-யில் 1,131 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 695 பங்குகள் ஏற்றத்திலும், 388 பங்குகள் இறக்கத்திலும், 48 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
யெஸ் பேங்க், ஜி எண்டர்டெயின்மெண்ட், வேதாந்தா சன் பார்மா, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. கோட்டக் மஹிந்திரா, நெஸ்ட்லே, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கெயில் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications