நேற்று பிப்ரவரி 24, 2020 திங்கட்கிழமை அன்று அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை 355 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
இதை சதவிகிதத்தில் பார்க்கும் போது 3.71 சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கிறது.
அமெரிக்க சந்தைகள் தான் மரண அடி வாங்கி இருக்கிறது என்றால், ஐரோப்பிய சந்தைகளும் பயங்கரமான சரிவுகளைச் சந்தித்து இருக்கின்றன.
லண்டன் பிரான்ஸ்
அதே போல ஐரோப்பிய சந்தைகளான லண்டனின் எப் டி எஸ் இ 247 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சதவிகிதத்தில் பார்த்தால் 3.34 சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் சி ஏ சி பங்குச்சந்தை 237 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. சதவிகிதத்தில் 3.94 சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கிறது.
ஜெர்மனி
அதே போல ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் சந்தையும் 544 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. சதவிகிதத்தில் 4.1% சரிவை சந்தித்து இருக்கிறது. நேற்று ஆசிய சந்தைகளும் கிட்டத் தட்ட இதே போல பயங்கரமா சரிவில் வர்த்தகம் நிறைவடைந்தன. நேற்றைய நிலவரம் இப்படி கலவரமாக இருந்தது என்றால், இன்று காலையில் இருந்தே ஆசிய சந்தைகள் ஓரளவுக்கு நிலையாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இனி தான் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகள் வர்த்தகமாகத் தொடங்கும்.
ஆசியா சந்தைகள்
ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளின் பங்குச் சந்தைகளில், ஜப்பானின் நிக்கி பங்குச் சந்தை 781 புள்ளிகள் சரிவை சந்தித்து இருக்கிறது. சதவிகிதத்தில் பார்க்கும் போது இது 3.34 சதவிகிதம் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய சந்தைகளில் ஓரளவுக்கு நல்ல ஏற்றத்தில் இருக்கும் சந்தை என்றால் அது தென்கொரியாவின் கோஸ்பி மட்டும் தான். கோஸ்பி 1.18 சதவிகிதம் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது
சென்செக்ஸ்
இத்தனை சிக்கலான உலக சந்தை நிலவரத்திற்கு மத்தியில் கூட இந்தியாவின் சென்செக்ஸ் இழுத்துப் பிடித்து சுமார் 70 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகம் ஆகிக் கொண்டு இருக்கிறது என்றால் உண்மையாகவே பெரிய விஷயம் தான். மிக முக்கியமாக சென்செக்ஸ் தன்னுடைய வலுவான சப்போர்ட் புள்ளியாக இருந்த 40,500 புள்ளிகளை கடந்து இன்று வர்த்தகம் நிறைவடைய வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
சென்செக்ஸ் 2
அப்படி ஒருவேளை சென்செக்ஸ் இன்று 40,500 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்து விட்டால், மீண்டும் சென்செக்ஸ் நிலை கொண்டு விட்டதாக பொருள் கொள்ளலாம்.ஆனால் இன்றைய தேதிக்கு சென்செக்ஸ் குறைந்தபட்சமாக 40 ஆயிரத்து 315 புள்ளிகளைத் தொட்டு மீண்டும் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருப்பதும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications