டிரம்ப் துவங்கி வைத்த வர்த்தக போர் உலக பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். கடந்த 2ம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளின் பொருட்கள் மீது குறைந்தபட்சம் 10 சதவீதம் இறக்குமதி வரி விதித்தார், மேலும் அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சுமார் 60 நாடுகள் மீது கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்தார்.
டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் வர்த்தக போருக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதி செய்வது போல், டிரம்ப் வரி விதித்த அடுத்த 48 மணி நேரத்துக்குள் சீனா பதிலடி கொடுத்தது.

இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு சீனா 34 சதவீதம் வரி விதித்தது. இதனால் சர்வதேச வர்த்தக போர் வெடிக்கும் என்ற அஞ்சம் அதிகரித்தது. இதன் விளைவாக தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை கரடி (வீழ்ச்சி) பகுதியில் நுழைந்தது. கடந்த 2 வர்த்தக தினங்களில் S&P 500 இன்டெக்ஸ் சுமார் 6 சதவீதம் சரிவடைந்தது. இதே காலத்தில் அமெரிக்க முதலீட்டாளர்கள் 5 லட்சம் கோடி டாலரை பங்குச் சந்தையில் இழந்தனர்.
டிரம்பின் கடுமையான வரிகளிலிருந்து தடுமாற்றமடைந்த பொருளாதாரத்தையும், வீழ்ச்சியடைந்த பங்குச் சந்தையையும் காப்பாற்ற, அந்நாட்டின் பெடரல் வங்கி விரைவில் வட்டி விகிதங்களை குறைக்கும் என்று நம்பும் முதலீட்டாளர்களும் ஏமாற்றமடையக் கூடும்.
அமெரிக்க பெடரல் வங்கி கவர்னர் ஜெரோம் பவல் நேற்று பேசுகையில், வரிகள் பணவீக்கத்தை அதிகரிக்கவும், பொருளாதாரத்தை மெதுவாக்க கூடும். பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதில் பெடரல் வங்கி விழிப்புடன் இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
அதாவது வட்டி விகிதத்தை உடனடியாக குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் ஜெரோம் பவல். இருப்பினும், பங்குச் சந்தை விற்பனையின் தீவிரம்,நம்பிக்கையில் சரிவு மற்றும் அசாரணமாக நிச்சயமற்ற எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அடுத்த பெடரல் வங்கியின் வெளிச்சந்தை கூட்டத்தில் (மே6-7) வட்டி விகிதங்களை குறைத்தால் அது பெரிய அதிர்ச்சியாக இருக்காது.
இது தவிர பார்க்லேஸ் பொருளாதார வல்லுனர்கள் கணிப்பின்படி, அமெரிக்காவில் பணவீக்கம் இந்த 4 சதவீதத்தை தாண்டும். நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருங்கும். இது மந்தநிலையுடன் ஒத்துப்போகிறது என்று தெரிவித்தனர்.
சிட்டி நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், உலகின் பிற பகுதிகளும் இந்த வலியிலிருந்து தப்ப முடியாது. உதாரணமாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் வளர்ச்சியில் 1 சதவீத அளவுக்கு பாதிப்பை சந்திக்கும். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் இது போன்ற அடியை சந்திக்கும் என்று தெரிவித்தனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

போருக்கு நடுவில் குத்தாட்டம்! சென்செக்ஸ் 2350 புள்ளிகள் உயர உண்மை காரணம் என்ன? பங்குகளில் முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications