பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமான விஷயமாக இருந்தாலும், தீபாவளி சந்தையில் வழக்கமாக ஏற்றம் காணும் பங்குகள் இந்த ஆண்டு எப்படியிருக்கும். இந்த ஆண்டும் லாபம் கிடைக்குமா? என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச அரசியல் பதற்றம், குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் என பல காரணிகளுக்கு மத்தியில் பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.
இதனால் அன்னிய முதலீடுகளும் தொடர்ந்து வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக இந்திய பங்கு சந்தைகளும் அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகின்றன.
சென்செக்ஸ் சரிவு
அறிக்கையின் படி நவம்பர் 4, 2021ல் இருந்து பார்க்கும்போது சென்செக்ஸ் கிட்டதட்ட 4% சரிவில் காணப்படுகின்றது. இதே பிஎஸ்இ மிட்கேப் மற்றும் பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடுகளானது முறையே கிட்டதட்ட 5% மற்றும் 1.31% சரிவில் காணப்படுகின்றன.
11 பங்குகள் நல்ல ஏற்றம்
இந்த சரிவானது இருந்த போதிலும் கூட பிஎஸ்இ 500 குறியீட்டில் உள்ள 11 பங்குகள் முதலீட்டாளர்களின் முதலீட்டினை, கடந்த தீபாவளி 2021ல் இருந்து இருமடங்காக ஏற்றம் கண்டுள்ளது. இந்த பட்டியலில் அதானி பவர் நிறுவனம் 215% ஏற்றத்துடன் முதலிடத்தில் உள்ளது. அக்டோபர் 14, 2022 அன்று இப்பங்கின் விலையானது 332.10 ரூபாயாக உச்சம் தொட்டது. இது கடந்த நவம்பர் 4, 2021ல் 105.35 ரூபாயாக இருந்தது.
119% வரையில் ஏற்றம்
அதானி பவரை தொடர்ந்து ஸ்ரீ ரேணுகா சுகர் (134% ஏற்றம் வரையில்), தீபக் ஃபெர்டிலைசர் அண்ட் பெட்ரோ கெமிக்கல்ஸ் காப்பரேஷன் (119% வரையில்), அதானி எண்டர்பிரைசஸ் (114% வரையில்), அதானி டோட்டல் கேஸ் (114% வரையில்), எல்கி எக்யூப்மெண்ட்ஸ் (111% வரையில்), மசகோன் டோக் ஷிப்பில்டர்ஸ் (109% வரையில்), குஜராத் ப்ளோரோ கெமிக்கல்ஸ் (107% வரையில்), ஃபைன் ஆர்கானிக் இண்டஸ்ட்ரீஸ் (106% வரையில்), ஷேஃப்லர் இந்தியா (104% வரையில்), பாரத் டைனமிக்ஸ் (100% வரையில்) ஏற்றம் கண்டுள்ளது.
தீபாவளிக்கு என்னென்ன பங்குகள்?
நிபுணர்கள் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க், வெஸ்ட்லைஃப் டெவலப்மெண்ட், ஐடிசி, இந்தியன் ஹோட்டல்ஸ், பாலிகேப், NOCIL உள்ளிட்ட சில நிறுவனங்களை வாங்க ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
இதே எஸ்பிஐ செக்யூரிட்டீஸ்- ஹெச் டி எஃப் சி வங்கி, ஐடிசி, பேங்க் ஆப் பரோடா, யுனைடெட் ஸ்பிரிட்ஸ்ம் சுமிடோமோ கெமிக்கல்ஸ், வேர்ல்பூல் ஆப் இந்தியா உள்ளிட்ட சில பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
என்னென்ன பங்குகள்
இதே யெஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் கட்டிட மூலதன பொருட்கள், இன்சூரன்ஸ், ரியல் எஸ்டேட், நீடித்த நுகர்வோர் பொருட்கள், வங்கிகள் உள்ளிட்ட துறைகள் இந்த காலகட்டத்தில் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில் ஸ்ரீ சிமெண்ட், கிரீன்பிளை இண்டஸ்ட்ரியல், ஐசிஐசிஐ ஃபுரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், பிரஸ்டீஜ் எஸ்டேட், வீகார்ட் மற்றும் எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட பங்குகளை வாங்க பரிந்துரை செய்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications