அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் உள்ளிட்ட பங்குகள் பிஎஸ்இ-ல் இன்று அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளன. தொடர்ந்து தொடக்கத்திலேயே ஏற்றத்திலேயே தொடங்கிய நிலையில், மற்ற பங்குகள் சரிவில் காணப்பட்டன.
குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & செஸ் மற்றும் அதானி வில்மர், அதானி பவர் உள்ளிட்ட பங்குகள் சரிவிலேயே காணப்படுகின்றன.
அதானி குழுமம் - ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு மத்தியில் அதானி குழும பங்குகள் கடுமையாக சரிவினைக் கண்டன. எனினும் இந்த கடுமையான காலகட்டத்திலும் அமெரிக்காவின் பிரபல நிறுவனமான GQG பார்ட்னர்ஸ் நிறுவனம், அதானி குழுமத்தில் 1.87 பில்லியன் டாலர் முதலீட்டினை அறிவித்தது.
கடன் விவரங்கள்
இது கெளதம் அதானி தலைமையிலான அதானி குழும நிறுவனங்களுக்கு ஆதரவாக அமைந்தது. அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் 0.76% பங்கினை பிணையமாக வைத்துள்ளது. அதேபோல அதனை எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கடன் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கூடுதல் கண்கானிப்பு
தேசிய பங்கு சந்தையானது அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் ஆகிய நிறுவனங்கள் கூடுதல் கண்கானிப்பில் உள்ளன.
ஜனவரி 24 அறிக்கையில் ஹிண்டர்ன்பர்க் ஆய்வுக் குழுவில் கணிசமான கடன் அளவைக் சுட்டிக் காட்டியது. இந்த நிலையில் தொடர்ந்து கடன்களை சுட்டிக் காட்டும் விதமாக வந்த நிலையில், அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டுள்ளது. எனினும் சமீபத்திய நாட்களாகவே அதானி குழுமம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சொத்து மதிப்பு ஏற்றம்
இதன் காரணமாக அதானி குழும பங்குகள் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன. கடந்த சில நாட்களாகவே அதானியின் நிகர மதிப்பும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. அதானி குழுமம் மற்றும் அல்ல, மற்ற பில்லியனர்களின் சொத்து மதிப்பும் கணிசமாக ஏற்றம் கண்டுள்ளது.
முதலீட்டாளர்கள் அச்சம்
எனினும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள 6 பேர் அடங்கிய குழுவானது என்ன சொல்ல போகிறது. இதன் காரணமாக அதானி குழும பங்குகள் என்ற பதற்றமும் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. ஆக இதுவும் நீண்டகால நோக்கில் அதானி குழும பங்குகளில் எதிரொலிக்கலாம்.


Click it and Unblock the Notifications