பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று குட் நியூஸ்.. அட்டகாசமான லாபம் தரக்கூடிய 3 பங்குகள்..!!

முன்னணி உள்நாட்டு பங்குத் தரகு நிறுவனமான ஆனந்த் ரதியின் மூத்த தொழில்நுட்ப ஆய்வாளர் கணேஷ் டோங்ரே, ஸ்மால் கேப் வகையைச் சேர்ந்த 3 பங்குகளுக்கு இலக்கு விலையுடன் வாங்குதல் மதிப்பீட்டை பரிந்துரைத்துள்ளார். இந்த 3 பங்குகளின் பட்டியலில் முதல் இடம் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மிஸ்ரா தந்து நிகம் லிமிடெட், இரண்டாவது மருந்துத் துறையைச் சேர்ந்த அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட் மற்றும் மூன்றாவது உற்பத்தித் துறையைச் சேர்ந்த சக்தி சுகர்ஸ் லிமிடெட் பங்குகள் உள்ளன. இன்றைய வர்த்தகத்தில் இந்த 3 ஸ்மால் கேப் பங்குகள் நல்ல லாபத்தை அளிக்க வாய்ப்புள்ளதாக கணேஷ் டோங்ரே முதலீட்டாளர்களுக்கு அவர் பரிந்துரைத்துள்ளார்.

மிஸ்ரா தந்து நிகம் லிமிடெட்: ஸ்மால் கேப் வகையைச் சேர்ந்த மிஸ்ரா தந்து நிகாம் லிமிடெட் வாங்கும் மதிப்பில் ரூ. 425 இலக்கு விலையுடன் முன்னணி பங்கு தரகு நிறுவனமான ஆனந்த் ரதியின் மூத்த தொழில்நுட்ப ஆய்வாளர் கணேஷ் டோங்ரே பரிந்துரை செய்துள்ளார். மேலும் இந்தப் பங்கிற்கு ரூ. 390 நிறுத்த இழப்பும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் பங்கு ரூ. 398 விலையில் வாங்கலாம் என்றும் ஆய்வாளர் கூறியுள்ளனர்.

 பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று குட் நியூஸ்.. அட்டகாசமான லாபம் தரக்கூடிய 3 பங்குகள்..!!

கடந்த வர்த்தகத்தில், மிஸ்ரா தந்து நிகம் லிமிடெட் பங்கு விலை 0.43 சதவீதம் அதிகரித்து ரூ. 398.80 இல் நிறைவடைந்தது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 541 ஆகவும், அதே போல் 52 வார குறைந்தபட்ச விலை ரூ. 345 ஆகவும் உள்ளது. இந்த பங்கு அதன் பங்குதாரர்களுக்கு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 5 சதவீதம் நஷ்டத்தை அளித்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 7470 கோடியாக உள்ளது.

அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட்: ஸ்மால் கேப் வகையைச் சேர்ந்த அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட் வாங்கும் மதிப்பில் ரூ. 1560 இலக்கு விலையுடன் ரூ. 1480 நிறுத்த இழப்பையும் முன்னணி பங்கு தரகு நிறுவனமான ஆனந்த் ரதியின் மூத்த தொழில்நுட்ப ஆய்வாளர் கணேஷ் டோங்ரே பரிந்துரை செய்துள்ளார். மேலும் இந்த நிறுவனத்தின் பங்கு ரூ. 1510 விலையில் வாங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வர்த்தகத்தில், அமி ஆர்கானிக்ஸ் லிமிடெட் பங்கு விலை 3.46 சதவீதம் அதிகரித்து ரூ. 1510 இல் முடிந்தது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 1550 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலை ரூ. 1004.45 ஆகவும் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கு அதன் பங்குதாரர்களுக்கு சுமார் 16 சதவீதத்தை திரும்ப அளித்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 6180 கோடி ஆகவும் உள்ளது.

சக்தி சுகர்ஸ் லிமிடெட்: ஸ்மால் கேப் வகையைச் சேர்ந்த சக்தி சுகர்ஸ் லிமிடெட் பங்குக்கு ரூ. 42 இலக்கு விலையுடன் ரூ.35 நிறுத்த இழப்பையும் முன்னணி பங்கு தரகு நிறுவனமான ஆனந்த் ரதியின் மூத்த தொழில்நுட்ப ஆய்வாளர் கணேஷ் டோங்ரே பரிந்துரை செய்துள்ளார். மேலும் இந்த நிறுவனத்தின் பங்கு ரூ. 38 விலைக்கு வாங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வர்த்தகத்தில், சக்தி சுகர்ஸ் லிமிடெட் பங்கு விலை 0.72 சதவீதம் அதிகரித்து ரூ. 38.01 ஆக முடிந்தது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 46.75 ஆகவும், 52 வாரங்களில் குறைவாக ரூ. 26.75 ஆகவும் இருந்தது. இது கடந்த ஆண்டில் இந்த பங்கு அதன் பங்குதாரர்களுக்கு சுமார் 13 சதவீதத்தை திரும்ப அளித்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 451.63 கோடியாக உள்ளது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+