லாபம் அளிக்கக் கூடிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புகின்றேன், எனவே எந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது என்பது தான் பலரது கேள்வியாக உள்ளன.
சாதாரணமாக பங்கு சந்தை குறித்து ஞானம் இல்லாதவர்கள் தங்களது நிதி ஆதாரத்தினை ரிஸ்க் இருந்தாலும் பரவாயில்லை என்று முதலீடு செய்ய விரும்பும் போது கேட்கப்படும் கேள்வியே அது,
எனவே கடந்த மூன்று வருடத்தில் இரட்டிப்பு லாபம் அளித்துள்ள சில நிறுவன பங்குகள் குறித்து இங்கு விளக்கமாக பார்க்கலாம்.
எய்ச்சர் மோட்டார்ஸ்
சிறிய வணிக வாகனங்களைத் தயாரித்து வரும் எய்ச்சர் மோட்டார்ஸ் மோட்டார்ஸ் சர்வதேச அளவில் ஏற்றுமதியைச் செய்து வருகிறது. சில வருடங்களுக்கு இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ராயல் என்ஃபீல்டு குறிப்பிட்ட அளவிலான பங்குகளை வாங்கியுள்ளது மட்டும் இல்லாமல் பிரீமியம் தயாரிப்பாகவும் மாறியுள்ளது.
சந்தை மூலதனம்: ரூ. 772 பில்லியன்
3 வருட லாபம்: 20%
விலை வருவாய் விகிதம்: 46
10 வருட சராசரி: 26
வெல்ஸ்பன் இந்தியா
டவல் தயாரிப்பு நிறுவனமான வெல்ஸ்பன் இந்தியா 94 சதவீத தயாரிப்பினை 50 வெளிநாட்டுச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
சந்தை மூலதனம்: ரூ. 67.2 பில்லியன்
3 வருட லாபம்: 22%
விலை வருவாய் விகிதம்: 18.4
10 வருட சராசரி: 16
அஜந்தா பார்மா
தயாரிப்பு ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது, மேலும் இந்தியாவில் முதன் முறையாகப் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ள பெருமையும் அஜ்ந்தா பார்மாவிற்கு சேரும்.
சந்தை மூலதனம்: ரூ. 122 பில்லியன்
3 வருட லாபம்: 9%
விலை வருவாய் விகிதம்: 24
10 வருட சராசரி: 31
அவந்தி ஃபீட்ஸ்
அவந்தி ஃபீட்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் இறால் சார்ந்த கடன் உணவுகளைத் தயாரித்து விநியோகித்து வருகிறது. உலகின் மிகப் பெரிய கடன் உணவு தயாரிப்பு நிறுவனத்தில் இதுவும் ஒன்று.
சந்தை மூலதனம்: ரூ. 106 பில்லியன்
3 வருட லாபம்: 98%
விலை வருவாய் விகிதம்: 23
10 வருட சராசரி: 24
பஜாஜ் ஃபின்னஸ்
இந்தியாவின் மிகப் பெரிய ஃபினாஸ் நிறுவனமான இது நாடு மூழுவதும் நிதி சேவைகளை அளித்து வருகிறது.
சந்தை மூலதனம்: ரூ. 974 பில்லியன்
3 வருட லாபம்: 60%
விலை வருவாய் விகிதம்: 50
10 வருட சராசரி: 16


Click it and Unblock the Notifications