5 பங்குகள் 100% மேலாக ஏற்றம்.. இனியும் வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றான மஹிந்திரா, பல்வேறு வணிகங்களில் வெற்றிகரமான செயல்பட்டு வருகின்றது. கடந்த ஒரு ஆண்டில் 103% ஏற்றத்தினை கண்டுள்ளது.

இந்தியாவினை தலைமையிடமாகக் கொண்ட இதன் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறை, ஆட்டோ உதிரிபாகங்கள், நிதி சேவைகள், ஐடி துறை, ரியல் எஸ்டேட் துறை என பல துறைகளில் செயல்பட்டு வருகின்றது.

இந்த குழுமத்தினை சேர்ந்த பட்டியலிடப்பட்ட 8 நிறுவனங்களில், 5 நிறுவனங்கள் கடந்த ஒரு மாதத்தில் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. பிப்ரவரி 16 2022 முதல் பிப்ரவரி 15, 2023 வரையிலான காலகட்டத்தில், 100% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. மீதமுள்ள மூன்று நிறுவனங்கள் எதிர்மறையான வருவாயினை கண்டுள்ளன.

நிபுணர்களின் பரிந்துரை

நிபுணர்களின் பரிந்துரை

இதில் நேர்மறையான வளர்ச்சியினை கொடுத்த நிறுவனங்களில், மஹிந்திரா CIE ஆட்டோமோட்டிவ் 103% அதிகரித்து, 399.8 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் வாகன உதிரி பாகங்கள் சப்ளையராகும்.

இந்த நிறுவனத்திற்கு கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் செல் ரேட்டிங்கினை கொடுத்துள்ளது. இதற்கான இலக்கு விலை 270 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் வாங்கலாம் என பரிந்துரை செய்தூள்ளது.

நிதி சேவை நிறுவனம்

நிதி சேவை நிறுவனம்

மஹிந்திரா & மஹிந்திரா நிதி சேவை நிறுவனம், வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனம் கடந்த ஒரு ஆண்டில் இப்பங்கின் விலை 75% ஆகவும் அதிகரித்து, 262.10 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் கிராமப்புறம் மற்றும் செமி அர்பன் பகுதிகளில் சேவையினை செய்து வரும் நிறுவனமாகும்.

வாங்கலாமா?

வாங்கலாமா?

நுவாமா இன்ஸ்டிடியூசனல் பைனான்ஷியல் நிறுவனம் இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இது முன்னதாக ஹோல்டு என பரிந்துரை செய்திருந்தது.

எனினும் மற்றொரு தரகு நிறுவனம் இந்த பங்கினை ஹோல்டு என பரிந்துரை செய்துள்ளது. இது இலக்கு விலையானது 260 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது ஏற்கனவே இந்த லெவலை எட்டியுள்ளது.

 மஹிந்திரா & மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் நல்ல லாபம் கொடுத்துள்ள நிறுவனங்களில் ஒன்று. இது பங்கின் விலையானது கடந்த ஒரு ஆண்டில் 66% அதிகரித்து, 1367.85 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் டிசம்பர் காலாண்டில் 14% அதிகரித்து, 1528 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதன் வருவாய் விகிதம் 41% அதிகரித்து, 21,654 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிர்மல் பேங்க் தரகு நிறுவனம் இதனை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இந்த பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம் இலக்கு விலையினை 1575 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே பிலிப் கேப்பிட்டல் நிறுவனம் 1535 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

மஹிந்திரா ஹாலிடே & ரிசார்ட்ஸ்

மஹிந்திரா ஹாலிடே & ரிசார்ட்ஸ்

அதனை தொடர்ந்து மஹிந்திரா ஹாலிடே & ரிசார்ட்ஸ் நிறுவனம் கடந்த ஓராண்டில் 39% அதிகரித்துள்ளது. இதன் இலக்கு விலையாக 576 ரூபாயாக தரகு நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.

இதே மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த 1 ஆண்டில் 26% அதிகரித்துள்ளது. இதன் இலக்கு விலையை சாய்ஸ் புரோக்கிங் நிறுவனம் 573 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+