அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கை இந்திய சந்தைகளுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளன. கடந்த வர்த்தக நடவடிக்கைகளில், சில அமர்வுகளில் வரம்புக்குட்பட்ட நகர்வுகளில் சிக்கிய இந்திய குறியீடுகளில் பிரேக்அவுட் ஏற்படும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்திய சந்தைகளில் அதிக அன்னிய முதலீடுகள் வரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் 100 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்று வல்லுநர்கள் கணிக்கும் 6 பங்குகள் என்ன என்பதை பார்க்கலாம்.
மகாநகர் கேஸ் லிமிடெட் : ரூ.18,783.6 கோடி சந்தை மதிப்பை கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் பங்குகள், இயற்கை எரிவாயு விநியோகம் செய்து வருகிறது. உலகளாவிய தரகு நிறுவனமான யுபிஎஸ் இந்த பங்கை வாங்க பரிந்துரை வழங்கப்படுகிறது. புதிய இலக்கு விலை ரூ.2,400 ஆகும். இது செவ்வாய் கிழமையின் இறுதி விலையான ரூ.1,901.6ல் இருந்து சுமார் 26 சதவீத லாபத்தை குறிக்கிறது.

இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட்: சந்தை மதிப்பு ரூ.38,318 கோடியுடன் முன்னணி நகர எரிவாயு விநியோக நிறுவனம் ஆகும். UBS இந்த பங்கை வாங்க பரிந்துரைத்துள்ளது. இலக்கு விலை ரூ.700 ஆகும். இது செவ்வாய் கிழமையின் இறுதி விலையான ரூ.547.4ஐ விட சுமார் 28 சதவீதம் அதிகமாகும். இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட், 1998 இல் நிறுவப்பட்டது. இது கெயில் (இந்தியா) லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்: சந்தை மதிப்பு ரூ.3.09 லட்சம் கோடியுடன் இது இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு வாங்கும் பரிந்துரையை எம்.கே குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் வழங்கியது. புதிய இலக்கு ரூ.2,550 ஆகும். இது செவ்வாய் கிழமையின் இறுதி விகிதமான ரூ.1,953.6ஐ விட சுமார் 31 சதவீதம் அதிகமாகும். நிறுவனம் பயன்பாட்டு அளவிலான கட்டம்-இணைக்கப்பட்ட சூரிய, காற்று, கலப்பின மற்றும் ஹைட்ரோ பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கி இயக்குகிறது.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட்: ரூ.52,092 கோடி சந்தை மூலதனம் கொண்ட இந்த பங்கு இந்தியாவின் முன்னணி மின்சார வாகன (EV) உற்பத்தியாளர் ஆகும். உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் பரிந்துரைத்துள்ளது. இதன் புதிய இலக்கு விலை ரூ.160 ஆகும். செவ்வாய்க்கிழமையின் இறுதி விலையான ரூ.118.1ல் சுமார் 36 சதவீதம் இருக்கும் என்று இது அறிவுறுத்துகிறது.
ஸ்டவ் கிராஃப்ட் லிமிடெட்: சந்தை மதிப்பு ரூ.3,041.8 கோடியுடன் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான இந்தியாவின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றாக வளம் வருவது ஸ்டவ் கிராஃப்ட் நிறுவனம். MK குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸில் உள்ள ஆய்வாளர்கள் வாங்கும் மதிப்பீட்டைக் கொடுத்துள்ளனர். இதன் இலக்கு விலை ரூ.1,350 ஆகும். இது செவ்வாய் கிழமையின் இறுதி விகிதமான ரூ.920.3ஐ விட சுமார் 47 சதவீதம் அதிகமாகும். இது பிரஷர் குக்கர், எல்பிஜி அடுப்புகள் மற்றும் நான்-ஸ்டிக் குக்வேர் ஆகியவற்றின் சிறந்த போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது.
நியோஜென் கெமிக்கல்ஸ் லிமிடெட்: சந்தை மதிப்பு ரூ.4,754 கோடியுடன் இந்த நிறுவனம் புரோமின் அடிப்படையிலான மற்றும் லித்தியம் அடிப்படையிலான சிறப்பு இரசாயனங்கள் தயாரிப்பதில் இந்தியாவின் முன்னணி உற்பத்தியாளர் ஆக உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கினை வாங்கும் பரிந்துரையை தரகு நிறுவனமான அவெண்டஸ் ஸ்பார்க்கிங் வழங்கியது. இலக்கு விலை ரூ.3,600 ஆகும். செவ்வாய்க்கிழமையின் இறுதி விலையான ரூ.1,802ஐ விட இது கிட்டத்தட்ட 100 சதவீத லாபத்தைக் குறிக்கிறது. மருந்து, பொறியியல் மற்றும் வேளாண் இரசாயனத் தொழில்களில் பயன்படுத்தப்படும் சூழல் நட்பு சிறப்பு இரசாயனங்கள் தயாரிக்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications