ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம் அடுத்த 21 முதல் 28 நாட்களுக்குள் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு 16 சதவிகிதம் வரை உயரும் என தெரிவித்துள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து இப்போது விரிவாக பார்க்கலாம்..
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto): இந்த நிறுவன பங்கினை ரூ. 9,860 முதல் 9,664 க்குள் வாங்க வேண்டும் என பரிந்துரை செய்கிறது ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம். இந்த பங்கு மதிப்பு வளர்ச்சி பாதையில் இருக்கும் என தங்களின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது என கூறும் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் பஜாஜ் ஆட்டோவின் ஒரு பங்கு மதிப்பு 10,550 ரூபாய் வரை உயரும் எனவும் அடுத்த 21 முதல் 28 நாட்களுக்குள் இந்த மதிப்பு அதிகரிக்கும் என கூறியுள்ளது.

எம்சிஎக்ஸ் (MCX): இந்த நிறுவன பங்கினை ரூ.4,550 முதல் ரூ.4,460க்குள் வாங்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. அடுத்த 21 முதல் 28 நாட்களுக்குள் இதன் மதிப்பு 9-13 சதவிகிதம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. வாராந்திர சார்ட் அடிப்படையில் பங்கு மதிப்பு உயரும் என்ற கணிப்பினை ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவன பங்கின் மதிப்பு கண்டிப்பாக ரூ.4,920 முதல் ரூ.5,100 வரை உயரும் என சொல்லப்படுகிறது.
டிசிஎஸ் (TCS ) : டாடா குழுமத்திற்கு சொந்தமான இந்த ஐடி நிறுவன பங்கு ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. இந்த பங்கினை ரூ. 4,385 முதல் 4,299 வரை வாங்கலாம் என்றும் இதன் மதிப்பு 7-9 சதவிகிதம் வரை உயரும் என்றும் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவிக்கிறது. வாராந்திர பகுப்பாய்வு அடுத்த சில வாரங்களுக்கு இதன் மதிப்பு தொடர்ந்து ஏறும் என்றே தெரிவிக்கிறது என ஆக்சிஸ் தரகு நிறுவனம் கூறியுள்ளது. எனவே அடுத்த ஓரு மாதத்திற்கு இதன் பங்கு மதிப்பு ரூ. 4,656 முதல் 4,750 என அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கணிப்பு வெளியாகியுள்ளது.
பார்பிகியூ நேஷன் ஹாஸ்பிடாலிட்டி (Barbeque Nation Hospitality): இந்த நிறுவன பங்கினை ரூ. 620 முதல் 607 வரை வாங்கலாம் என ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவிக்கிறது. அடுத்த ஒரு மாதத்தில் இதன் மதிப்பு 12-16 சதவிகிதம் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் கணிப்பு படி இந்த பங்கு மதிப்பு ரூ. 690-713 வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Devika
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications