முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கிய 2 பங்குகள்… உங்க போர்ட்போலியோவில் இருக்கா?

முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கிய 2 பங்குகள்... உங்க போர்ட்போலியோவில் இருக்கா?

பங்குச்சந்தைகளில் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கு முன்பாக அந்த நிறுவனம் என்ன தொழில் செய்கிறது, ஈவுத்தொகை வழங்குகிறார்களா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் . அப்படி கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு முதலீட்டாளர்களுக்கு பல மடங்கு லாபம் தந்த இரண்டு நிறுவனங்கள் குறித்து தற்போது தெரிந்து கொள்ள போகிறோம்.

பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் (Persistent systems):

சாப்ட்வேர் மற்றும் டெக்னாலஜி சேவைகளை வழங்கி வரும் பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ், 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இயங்கும் நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருள் சேவைகள், கிளவுட் உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

 முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கிய 2 பங்குகள்… உங்க போர்ட்போலியோவில் இருக்கா?

கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். புவியியல் ரீதியாக பார்க்கும்போது இந்த நிறுவனத்தின் 81% வருமானம் வட அமெரிக்காவில் இருந்து தான் வருகிறது. 9 சதவீத வருமானம் இந்தியாவில் ,மற்ற இடங்களில் இருந்து இரண்டு சதவீதமும் என வருகிறது.

2019ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் கல்ரா பொறுப்பேற்றார். இவர் பதவி ஏற்றது முதலே இந்நிறுவனம் சிறந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் (CAGR) 30 சதவீதம் என இந்நிறுவனத்தின் வருமானம் வளர்ச்சி அடைந்துள்ளது, 2025ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் 119.4 பில்லியன் ரூபாயாக இருக்கிறது.

சர்வதேச அளவில் ஐடி நிறுவனங்கள் மந்தநிலையை எட்டி இருந்தாலும் இந்த நிறுவனம் தொடர்ந்து லாபத்துடன் தான் இருக்கிறது. 2025ஆம் ஆண்டு நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் 22% ஆக உயர்ந்துள்ளது. நிகரலாபமும் 14 பில்லியன் ரூபாயாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

2025ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இதன் return on capital employed எனப்படும் RoCE 40 சதவீதமாகவும், return on equity எனப்படும் RoE 25 சதவீதமாகவும் இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் ஐ பி ஓ வெளியீடு செய்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது முதல் இதன் பங்கு மதிப்பு 70 மடங்கு உயர்ந்துள்ளது 175 சதவீதம் ஈவுத்தொகையும் வழங்கியுள்ளது.

Value Research வெளியிட்டுள்ள தகவலின் படி இந்நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 8 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 1 கோடி 20 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும் என கூறுகிறது. இதில் 3.4 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும். தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5425 ரூபாயாக இருக்கிறது. இது விரைவில் 6450 ரூபாயாக உயர வாய்ப்பு இருப்பதாக மோதிலால் ஓஸ்வால் வெளியிட்டுள்ள கணிப்பு கூறுகிறது.

பிடிலைட் இண்ட்ஸ்ட்ரீஸ் (Pidilite industries):

1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பசைகள் மற்றும் குறிப்பிட்ட கெமிக்கல் உற்பத்தியில் ஈடுப்பட்டு உள்ளது. இந்தியாவில் பசை விற்பனையில் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது. Fevicol, Steelgrip, Dr. Fixit, M-Seal, Fevikwik ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் மூலை முடுக்கு எங்கும் பரவி இருக்கிறது. நல்ல பிராண்டிங் சிறந்த மார்க்கெட்டிங் என நிறுவனம் தன்னுடைய இடத்தை தக்க வைத்துள்ளது.

 முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கிய 2 பங்குகள்… உங்க போர்ட்போலியோவில் இருக்கா?

நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மூலம் 82 சதவீதமும், தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் 18 சதவீத வருமானமும் இந்த நிறுவனத்திற்கு கிடைக்கிறது.

பசைகள் விற்பனை மூலம் 55 சதவீத வருமானமும், பெயிண்ட்களுக்கான ரசாயனங்கள் மூலம் 21 சதவீத வருமானம் கிடைக்கிறது. ஆலைகளுக்கான ரெசின்கள் மற்றும் கட்டுமான ரசாயனங்களுக்கு 8.4 சதவீத வருமானமும் கிடைக்கிறது. இந்த நிறுவனம் 2020இல் இருந்து 2024 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 15 சதவீதம் என வருமானத்தை பெருக்கியுள்ளது.

2024 ஆம் நிதி ஆண்டு இந்த நிறுவனத்தின் வருமானம் 111.2 மில்லியன் ரூபாய் ஆகும். 2024ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 11.5 சதவீதம் உயர்ந்து 17.9 பில்லியன் ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 8 லட்சம் ரூபாய் முதலீடு செய்தவர்களுக்கு தற்போது அதன் மதிப்பு 42 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.

பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் சுமார் 2200 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 84, 517 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் முக மதிப்பு 5ஆக உள்ளது. இந்நிறுவனத்தின் பங்குகளில் 30 சதவீதம் பிரமோட்டர்கள் வசம் இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வசம் 24 சதவீதமும் , மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வசம் 21 சதவீதமும் உள்ளன. சில்லறை முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தில் 18 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள். மே 5ஆம் தேதி இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5,549 ரூபாய் என வர்த்தகமானது.

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கினை பொருத்தவரை இதன் சந்தை மூலதன மதிப்பு 1, 52, 981 கோடி ரூபாய் ஆகும். இந் நிறுவன பங்கின் முக மதிப்பு 1ஆக உள்ளது. நிறுவன பங்கில் 69 சதவீதம் பிரமோட்டர்கள் வசமே இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 11 சதவீத பங்குகளை வைத்துள்ளன. சில்லறை முதலீட்டாளர்கள் 9 சதவீத பங்குகளையும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் 4 சதவீத பங்குகளையும் கொண்டு இருக்கின்றன. மே 5ஆம் தேதி இந்நிறுவன பங்கின் மதிப்பு 3,031 ரூபாய் என வர்த்தகமானது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+