மும்பை: உள்நாட்டு தரகு நிறுவனமான ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் சிறப்பு கெமிக்கல் நிறுவனமான ஏதர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
இதன் இலக்கு விலை 1121 ரூபாயாக கணித்துள்ளது. இது தற்போதைய லெவலில் இருந்து 24% ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.
தொடர்ந்து இந்த நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாங்கலாம்
இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பொருட்கள், தொழில் நுட்ப மேலாண்மை, அதன் பெரும்பாலான தயாரிப்புகளில், வலுவான தயாரிப்பு மற்றும் மார்கியூ வாடிக்கையாளர் தளம் ஆகியவற்றின் பின்னணியில் ஏதர் நிறுவனத்தினை வாங்கலாம் என்ற மதிப்பீட்டினை கொடுத்துள்ளது.
சவுதி அராம்கோவுடன் ஒப்பந்தம்
ஏதர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் வணிக வளர்ச்சியினை ஊக்குவிக்க சவுதி அராம்கோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அதன் வாடிக்கையாளர்களுடனான சேவையை மேம்படுத்துவதற்கும் இது வழிவகுக்கும் என தரகு நிறுவனம் நம்புகிறது.
வாடிக்கையாளர்கள் விரிவாக்கம்
ஹெச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ் நிறுவனம் ஏதர் நிறுவனம் அதன் சேவையை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், அதன் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், அவர்களின் வாலட்களின் பங்கினை அதிகரிக்கவும், அதே நேரத்தில் புதிய வாடிக்கையாளர்களை பெறவும் தேவையான நிபுணத்துவத்தை கொண்டுள்ளது.
வருவாய் அதிகரிக்கலாம்
இது தொடர்ந்து பல புதிய ஒப்பந்தங்களை பெறும் நல்ல நிலையில் உள்ளது. இதற்கிடையில் சவுதி அராம்கோ மற்றும் ஏதரின் இந்த கூட்டணி மூலம், அதன் வருவாய் 150 - 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதை ஈதர் இண்டஸ்ட்ரீஸ் நோக்கமாக கொண்டுள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
மொத்தத்தில் இதன் வளர்ச்சி விகிதம் என்பது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இப்பங்கினை நீண்டகால நோக்கில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் எனலாம்.


Click it and Unblock the Notifications