சர்வதேச சந்தைகள் பலவும் ஏற்றத்தில் முடிவடிந்ததையடுத்து இந்திய சந்தையானது இன்று சற்று ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 59.15 புள்ளிகள் அதிகரித்து, 58,833.87 புள்ளிகளாகவும், நிஃப்டி 36.45 புள்ளிகள் அதிகரித்து, 17,558.90 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் இன்று தரகு நிறுவனம் ஒன்று கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தின் பங்கு விலையானது 3 மாதத்தில் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது.
வாங்கி வைக்கலாம்
மினிரத்னா வகையை சேர்ந்த இந்த பங்கினை CMP: 364.45 வாங்கி வைக்கலாம் என்றும், இதன் இலக்கு விலை 405 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இதற்காக ஸ்டாப் லாஸ் 324 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இந்த பங்கினை ஆவரேஜ் செய்வதற்கான லெவல் 333 ரூபாயாகவும் ஹெச் டி எஃப் சி தரகு நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.
வருவாய்
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் விகிதம் 31% அதிகரித்து, 440.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஷிப் கட்டமைப்பு துறையில் 47% வளர்ச்சியும், ஷிப் பழுதுபார்க்கும் துறையில் 47% வளர்ச்சியும் கண்டுள்ளது. எபிடா மார்ஜின் விகிதமும் 7.1%மும் வளர்ச்சி கண்டுள்ளது. இதே வரிக்கு பிந்தைய லாபமும் 47.2% அதிகரித்து, 42.2 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
ஷிப் யார்டு நிறுவனம்
இது ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் ஷிப் கட்டமைப்பு நிறுவனமாகும். இது இந்தியாவில் மிகப்பெரிய ஷிப் கட்டமைப்பு மற்றும் பழுதுபார்க்கும் ஒரு நிறுவனமாகும். இது ஹவுராவிலும் செயல்பட்டு வருகின்றது. இதன் சந்தை மதிப்பு 4793.33 கோடி ரூபாயாகும்.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்
இதே ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனமும் இப்பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதனை 355 - 365 ரூபாய் என்ற லெவலில் வாங்கலாம். இதன் இலக்கு விலை 425 ரூபாய் எனவும் பரிந்துரை செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 327 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய மதிப்பில் இருந்து 16% ஏற்றம் காணலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இலக்கு விலையானது அதன் 52 வார உச்ச விலையையும் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்கு நிலவரம்?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 3.79% அதிகரித்து, 364.45 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 368.90 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 353.05 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 3.80% அதிகரித்து, 364.40 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 368.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 353.05 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 383.25 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 281 ரூபாயாகவும் உள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications