பென்னி பங்கு கொடுத்த அட்டகாசமான சான்ஸ்.. 3 வருடத்தில் 1163%.. ஆனா இன்னொரு சான்ஸூம் இருக்கு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பென்னி பங்குகள் என்றாலே ரிஸ்கான திட்டம். முதலீட்டாளர்களுக்கு இது சரியான வாய்ப்பாகவே இருக்கும். பென்னி பங்குகள் குறைந்த விலையில் வர்த்தகமாகும் பங்குகள். இந்த பங்குகள் 10 ரூபாய்க்கு கீழாக வர்த்தகமாகி வரும் பங்களாகும்.

 

பென்னி பங்குகளின் சிறப்பம்சமே குறைந்த விலை தான். எனினும் குறைந்த விலையில் கிடைக்கிறது என எல்லாப் பங்குகளையும் வாங்கிவிட முடியாது. இதில் சிறந்த நிறுவனங்களாக தேர்ந்தெடுத்து முதலீடு செய்து வைக்கலாம்.

குறைந்த முதலீட்டில் நிறைய பங்குகளை வாங்கலாம். பென்னி பங்குகள் குறைந்த முதலீட்டில் மிகப்பெரிய ஆதாயத்தினை வழங்கும் பங்குகளாகும். எனினும் அதேஅளவு இந்த பங்குகளில் ரிஸ்கும் உண்டு என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

எல்ஐசி-யே வித்திடுச்சா.. அப்படின்னா கவனிக்க வேண்டிய பங்கு தான்.. லிஸ்டில் உள்ள அந்த 3 பங்குகள்! எல்ஐசி-யே வித்திடுச்சா.. அப்படின்னா கவனிக்க வேண்டிய பங்கு தான்.. லிஸ்டில் உள்ள அந்த 3 பங்குகள்!

உரிமை பங்கு வெளியீடு

உரிமை பங்கு வெளியீடு

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பென்னி பங்கு இந்தியன் இன்ஃபோடெக் சாப்ட்வேர் லிமிடெட் நிறுவனமாகும். இது ஸ்மால் கேப் நிறுவனமாகும். இது நிதிச் சேவை துறையில் செயல்பட்டு வரும் ஒரு ஸ்மால் கேப் பங்காகும். ரிசர்வ் வங்கியால் என் பி எஃப் சி உரிமம் பெற்றுள்ள இந்த நிறுவனம், உரிமை பங்கு வெளீயீடு மூலம் 48.26 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

 உரிமை பங்கு வெளியீடு என்றால் என்ன?

உரிமை பங்கு வெளியீடு என்றால் என்ன?

அதெல்லாம் சரி அதென்ன உரிமை பங்கு வெளியீடு? உரிமை பங்கு வெளியீடு என்றால் என்ன? ஒரு நிறுவனம் ஏற்கனவே தனது பங்கினை வெளியிட்ட நிலையிலே, மீண்டும் சந்தை விலையினை விட தள்ளுபடி விலையில் வழங்கப்படும் பங்குகள் தான் உரிமை பங்கு வெளியீடாகும். இதில் நல்ல நிறுவன பங்குகளை, சந்தை விலையினை விட குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக இருக்கும்.

எவ்வளவு பங்குகள்?
 

எவ்வளவு பங்குகள்?

இந்த நிறுவனத்தின் நிர்வாக குழுக்கள் பங்கு சந்தையில் தாக்கல் செய்ததில், அதன் இயக்குனர்கள் குழு 1 ரூபாய் முகமதிப்புள்ள பங்கினை கொண்ட, 48,26,82,960 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளுகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே உள்ள பங்குதாரர்களும் வாங்க முடியும். அதேபோல ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களும் கலந்து கொள்ள முடியும்.

நிகர லாபம்

நிகர லாபம்

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை கடந்த ஆண்டில் 2.25 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனையை செய்திருந்த நிலையில், நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 2.30 கோடி ரூபாய் விற்பனையை செய்ய திட்டமிட்டுள்ளது. இதே இதன் நிகர லாபம் இரண்டாவது காலாண்டில் 1.94 கோடி ரூபாயாக இருந்தது. இதன் கடந்த ஆண்டு நிகரலாபம் 2.14 கோடி ரூபாய் நிகர லாபம்.

 இபிஎஸ் விகிதம் சரிவு

இபிஎஸ் விகிதம் சரிவு

இரண்டாவது காலாண்டில் எபிட்டா விகிதம் 9.34% குறைந்து, 1.94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டில் 2.14 கோடி ரூபாயாக இருந்தது. இதன் இபிஎஸ் விகிதம் கடந்த ஆண்டில் 0.0212 ஆக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 0.0193 ஆக குறைந்துள்ளது.

மல்டிபேக்கர் பங்கு

மல்டிபேக்கர் பங்கு

இந்தியன் இன்ஃபோடெக் & சாப்ட்வேர் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை, கடந்த அமர்வில் 1.27% அதிகரித்து, 2.40 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது முந்தைய அமர்வில் 2.37 ரூபாயாக முடிவடைந்திருந்தது.

இந்த மல்டிபேக்கர் பங்கானது கடந்த 5 ஆண்டுகளில் 1168.42% அதிகரித்துள்ளது. இதே கடந்த 3 வருடத்தில் 1163.16% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஆண்டில் 14.84% ஏற்றம் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் 72.7% ஏற்றம் கண்டுள்ளது.

பங்கு வசம்

பங்கு வசம்

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தில் புரோமோட்டர்கள் வசம் 16.41% பங்கானது இருந்தது. இதே இதன் உள்நாட்டு பங்கு தாரர்கள் வசம் 0.22%மும், பொது முதலீட்டாளர்கள் வசம் 83.38% உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

This Multibagger penny stock rises 1163% in 3 years

Indian Infotech Software Ltd. is a small cap company that plans to raise Rs 48.26 crore through rights issue.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X