1 வருடத்தில் இருமடங்கு லாபம்.. இன்னும் லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனம் கொடுத்த சூப்பர் அப்டேட்!

கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Greenpanel Industries Ltd) நிறுவனத்தின் பங்கானது, கடந்த 12 மாதங்களில் முதலீட்டாளர்களின் முதலீட்டினை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கின் விலையானது 233 ரூபாயில் இருந்து, 551 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் 136 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.

மார்ச் 2022வுடன் முடிவடைந்த 4வது காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 42.7 சதவீதம் அதிகரித்து, 80.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மீடியம் டென்சிட்டி ஃபைபர்போர்டு

மீடியம் டென்சிட்டி ஃபைபர்போர்டு

இதே இந்த நிறுவனத்தின் விற்பனையானது 20.9 சதவீதம் அதிகரித்து, 470.08 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மீடியம் டென்சிட்டி ஃபைபர்போர்டு (Medium-density fibreboard ) விற்பனை 389.31 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே பிளைவுட் விற்பனையானது 70.46 கோடி ரூபாயாக உள்ளது.

ஏற்றத்தில் பங்கு விலை

ஏற்றத்தில் பங்கு விலை

இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 6,425 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கிடையில் இப்பங்கின் விலையானது டெக்னிக்கலாக பார்க்கும்போது 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 5 நாள், 20 நாள், 50 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் கீழாக வர்த்தகமாகி வருகின்றது.

ஏற்றம் காணலாம்

ஏற்றம் காணலாம்

யெஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் 4வது காலாண்டில் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இது ரியல் எஸ்டேட் துறையில் வலுவான வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மேற்கொண்டு இப்பங்கானது ஏற்றம் காண வழிவகுக்கலாம். மேலும் வரவிருக்கும் மாதங்களிலும் இறக்குமதிகள் குறையலாம் என்பதால் இது விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். 

என்ன செய்கிறது?

என்ன செய்கிறது?

கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய மரத் தகடுகளை உற்பத்தி செய்து வருகின்றது. இதன் ஆலைகள் ஆந்திர பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் உள்ள ஆலைகளில் அதன் உற்பத்தி ஆலைகள் பல்வேறு வகையான மரப்பலைகளை உற்பத்தி செய்கிறது.

இன்று என்ன நிலவரம்

இன்று என்ன நிலவரம்

கிரீன்பேனல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது என்.எஸ்.இ-யில் 8.34% சரிவினைக் கண்டு, 497.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவரையில் இன்றைய உச்சம் 552.05 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 491.55 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 625.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 215 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் 7.81% சரிவினைக் கண்டு, 499.30 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவரையில் இன்றைய உச்சம் 551 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 491.20 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 625 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 212.55 ரூபாயாகும்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+