சமீபத்திய வாரங்களாகவே இந்திய பங்கு சந்தையானது பலத்த ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. இதனால் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில் ரிலாக்ஸோ புட்வேர் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த ஓராண்டில் கணிசமான சரிவினைக் கண்டுள்ளது. இப்பங்கின் விலையானது 36% சரிவினைக் கண்டு, 778 ரூபாயாக சரிவில் காணப்படுகின்றது.
ஜூலை 2019-ல் இருந்து நவம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் இப்பங்கானது, 245% ஏற்றத்தினை கண்டுள்ளது. இப்பங்கானது 419 ரூபாய் என்ற லெவலில் இருந்து, 1448 ரூபாய் என்ற ஆல் டைம் உச்சத்தினையும் எட்டியது.
தொடர் சரிவில் பங்கு
எனினும் அதன் பிறகு மீண்டும் கணிசமான சரிவினை கண்டுள்ளது. இன்றைய தேதி வரையிலும் இப்பங்கின் விலையானது சரிவில் காணப்படுகின்றது. இது கடந்த நவம்பர் 2021ல் இருந்து 46% சரிவினைக் கண்டுள்ளது.
கடந்த 4 மாதங்களில் இப்பங்கின் விலையானது சுமார் 20% சரிவினைக் கண்டுள்ள நிலையில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பலவீனமான சரிவினைக் கண்டு வருகின்றது.
நிகரலாபம்
இந்த நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டில் இதன் நிகர லாபம் 67% சரிவினைக் கண்டு, 22 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே மூன்றாவது காலாண்டிலும் 34.35% லாபம் அதிகரித்து, 30.10 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது.
வருவாய் விகிதம்
இதே இதன் வருவாய் விகிதம் மூன்றாவது காலாண்டில் 681 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 8.46% சரிவினைக் கண்டு, 744 கோடி ரூபாயாக இருந்தது.
இது தேவையானது சரிவினைக் கண்ட நிலையில், வருவாயும் சரிவினைக் கண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் குறைந்த விலை பொருட்கள் மற்றும் அதிக விலை சார்ந்த பொருட்களை இருப்பு அதிகம் இருந்த நிலையில் வந்துள்ளது.
விலை குறைப்பு
கடந்த செப்டம்பர் 2022ல் நிறுவனம் ஓபன் புட்வேர் விலையினை 15 - 20% குறைத்தது. மேலும் குறைப்புகளின் முழு தாக்கமும் பின் வரும் காலாண்டுகளில் தெரியவரும் என கூறப்படுகின்றது. எனினும் இது அதிகளவிலான இருப்புகள் அகற்ற பயன்படுத்தப்படும் ஒரு யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது.
மீண்டு வரும்?
இதற்கிடையில் 4வது காலாண்டில் நிறுவனம் முழுமையாக மீண்டு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏனெனில் விலை குறைப்பு குறித்து கணினியில் செய்யப்பட்ட மாற்றங்கள் முழுமையும் வரத் தொடங்கும்.
தரகு நிறுவனமான ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ், வேகமாக வளர்ந்து வரும் சந்தை பிரிவான விளையாட்டு மற்றும் தடகளப் பிரிவில் இதன் பங்கினை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியினை விரிவாக்கம் செய்ய திட்டமிடுகின்றது. குறிப்பாக அதன் பிரீமியமயமாக்கலில் கவனம் செலுத்த விரும்புவதாக தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலக்கு விலை குறைப்பு
மொத்ததில் இதன் திறனை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது போட்டியினை சமாளிக்க உதவும் என்பதோடு, சந்தையில் தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுமெனலாம்.
இதற்கிடையில் தரகு நிறுவனங்களின் இப்பங்கின் இலக்கு விலையை 850 ரூபாயாக குறைத்துள்ளது. இது முன்னதாக 950 ரூபாயாக நிர்ணயம் செய்திருந்தது.
லிமிட் ஆக ஏற்றம் காணலாம்
அதேசமயம் ஐசிஐசிஐ ஆய்வு நிறுவனமானது இந்த பங்கின் அவுட்லுக்கினை பாசிட்டிவ் ஆக கொடுத்துள்ளது. இது டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் நல்ல வளர்ச்சியினை கொண்டுள்ளது. இதன் பேலன்ஸ் சீட்டும் நல்ல மதிப்பினை கொண்டுள்ளது. எனினும் நிலவி வரும் தலைவலிகளில் அதன் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications