கொரோனாவின் முதல் கட்ட அலையின்போது கடந்த 2020ன் தொடக்கத்தில் இந்திய சந்தையானது பலத்த சரிவினை கண்டது. எனினும் மீண்டும் மார்ச் கடைசியில் இருந்து ஏற்றம் காண ஆரம்பித்த சந்தையானது நல்ல ஏற்றத்தினை கண்டது.
இந்த காலக்கட்டத்தில் பல மல்டிபேக்கர் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு லாபத்தினை வாரி வழங்கின.
கடந்த 2022ம் நிதியாண்டில் மட்டும் 190க்கும் அதிகமான பங்குகள் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளன. குறிப்பாக கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் மட்டும் 90 பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ளன.
போரோசில் ரீனிவபிள் லிமிடெட்
அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1700 சதவீதத்திற்கு மேலாக ஏற்றம் கண்ட , போரோசில் ரீனிவபிள் லிமிடெட் பங்கின் விலை பற்றித் தான் இன்று பார்க்கவிருக்கிறோம். இது ரூபாய் 36 என்ற லெவலில் இருந்து 650 ரூபாய் என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது. இந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1725 சதவீதம் அதிகரித்துள்ளது.
போரோசில் ரீனிவபிள் பங்கு வரலாறு
இந்த மல்டிபேக்கர் பங்கானது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 557.60 - 650 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் 16.50 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஆறு மாதத்தில் இப்பங்கின் விலையானது, 330 ரூபாய் என்ற லெவலில் இருந்து 650 ரூபாய் என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரூ. 1 லட்சம் முதலீடு ரூ.18 லட்சம்
இதே கடந்த ஒரு வருடத்தில் இப்பங்கின் விலையானது 245 ரூபாய் முதல் 650 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 165 சதவீத வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இப்பங்கின் விலையானது 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 18.25 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கலாம்.
தேவை அதிகரிக்கலாம்
இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதனம் கிட்டதட்ட 8500 கோடி ரூபாயாகும். இதன் புத்தக மதிப்பு ஒரு பங்கிற்கு 47க்கும் சற்று அதிகமானதாக உள்ளது. இது புதுபிக்கதக்க ஆற்றல் துறையை சேர்ந்த ஒரு பங்கு என்பதால், இதன் தேவையானது எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விலை நிலவரம்?
போரோசில் ரீனிவபிள் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வின் முடிவில் NSE-யில் 0.38% அதிகரித்து, 655.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 747.90 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 213.25 ரூபாயாகும்.
இதே BSE-ல் 0.41% குறைந்து, 650.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 748 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 215.80 ரூபாயாகும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications