Alkyl Amines Chemicals நிறுவனம் கடந்த 12 மாதங்களில் இந்த பங்கின் மதிப்பானது 353%, கடந்த ஜூலை 27, 2020 அன்று 909.5 ரூபாய் என்று இருந்த நிலையில், தற்போது 4,490 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த 12 மாதங்களில் மட்டும் இந்த பங்கின் விலையானது 353% அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 39% ஏற்றம் கண்டுள்ளது. 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கலாம்.
கடந்த 3 வருடத்தில் இந்த பங்கின் விலையானது 1497% அதிகரித்துள்ளது. இதே கடந்த 5 வருடத்தில் 2,874% லாபத்தினை கொடுத்துள்ளது.
பங்கின் விலை அதிகரிக்கலாம்
இது தான் இப்படி எனில் நடப்பு ஆண்டின் பாதியில் மட்டும் இருமடங்கிற்கும் அதிகமாக லாபத்தினை கொடுத்துள்ளது. நிபுணர்கள் இன்னும் இந்த பங்கின் விலையானது நல்ல ஏற்றம் காணும் என்றே நம்புகின்றனர். ஏனெனில் தடுப்பு மருந்தின் தேவையானது அதிகரிக்கும் என்பதால், இந்த பங்கின் விலையும் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் நம்புகின்றனர்.
இன்றைய பங்கு விலை
இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது இன்று என்.எஸ்.இ-யில் 9.50% ஏற்றம் கண்டு, 4,407 ரூபாயாக காணப்படுகிறது. இதே பி.எஸ்.இ-யில் 9.40% ஏற்றம் கண்டும் 4410.20 ரூபாயாகவும் காணப்படுகிறது. இந்த பங்கின் இன்றைய உச்ச விலையானது 4,490 ரூபாயாகும். இது தான் இதன் 52 வார உச்ச விலையாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 894 ரூபாயாகும்.
டெக்னிக்கலாக எப்படியுள்ளது?
22,000 கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மூலதனத்தினை கொண்டுள்ள இந்த பங்கானது, 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜூக்கு மேலாகவே உள்ளது. அதோடு டெக்னிக்கலாக இன்னும் சில குறிகாட்டிகளும் ஏற்றம் காணும் விதமாக உள்ள நிலையில், இந்த பங்கின் விலையானது இன்னும் ஏற்றம் காணும் விதமாகவே காணப்படுகிறது.
லாபம் எவ்வளவு?
இந்த நிறுவனத்தின் லாபமானது முந்தைய காலாண்டுகளை காட்டிலும் கிட்டதட்ட லாபம் மார்ச் காலாண்டில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 49.21 கோடி ரூபாயாக இருந்த லாபமானது, நடப்பு ஆண்டின் மார்ச் காலாண்டில் 92.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் 63% அதிகரித்து, 382.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
உற்பத்தி தளங்கள்
அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ் நிறுவனம் பல்வேறு மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் மகாராஷ்டிராவின் படல்கங்கா மற்றும் குர்கும்பிலும், குஜராத்தில் தஹேஜிலும் 12 உற்பத்தி ஆலைகல் மற்றும் தொடர்புடைய பயன்பாடுகளுடன் மூன்று உற்பத்தி தளங்களைக் கொண்டுள்ளது.
நிபுணர்களின் எதிர்பார்ப்பு
மொத்தத்தில் எதிர்காலத்திலும் இந்த நிறுவனத்தின் தேவை என்பது அதிகமாகவே உள்ள நிலையில், இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்னும் அதிகரிக்கலாம். இதனால் முதலீட்டாளர்களுக்கு இன்னும் பொற்காலம் உள்ளது. ஆக இந்த பங்கின் விலை சற்று குறையும் போது, நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications