பொதுவாக பங்கு சந்தை முதலீட்டில் சரியான பங்குகளை தேர்வு செய்வதே மிக கடினமான ஒரு விஷயமாக இருக்கும். அப்படி தேர்வு செய்து விட்டால், அதுவே நீண்டகால நோக்கில் லாபகரமான பங்குகளில் ஒன்றாக இருக்கும்.
அப்படி நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுத்த ஸ்மால் கேப் பங்கான மான் அலுமினியம் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 240.20 கோடி ரூபாயாக உள்ளது.
மெட்டல் துறையினை சேர்ந்த நிறுவனமான இது, அலுமினியம் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமாகும். இது ஒரு முன்னணி ஏற்றுமதி நிறுவனமாகும். உலகம் முழுவதும் அதன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது.
இடைக்கால டிவிடெண்ட்
இது கடந்த நவம்பர் 5, 2022 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் நிறுவனத்தின் இயக்குனர் குழு, 2022 - 2023 நிதியாண்டில் இரண்டாவது முறையாக 10% இடைக்கால டிவிடெண்டினை அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் அதன் செயல்பாட்டு வருவாயினை 188.20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முதல் காலாண்டில் 173.16 கோடி ரூபாயாக உள்ளது. இதே கடந்த ஆண்டில் 158.15 கோடி ரூபாயாக உள்ளது.
நிகரலாபம்
இந்த நிறுவனத்தின் நிகரலாபம் கடந்த ஆண்டினை காட்டிலும் 19% அதிகரித்து, செப்டம்பர் காலாண்டில் 13.10 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முதல் காலாண்டில் 8.40 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் 4.69 கோடி ரூபாயாக இருந்தது. இதன் இபிஎஸ் விகிதம் இரண்டாவது காலாண்டில் 9.69 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முதல் காலாண்டில் 6.21 ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டில் 3.47 ரூபாயாக இருந்தது.
பங்கு விலை நிலவரம்
மான் அலுமினியம் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 180 ரூபாயாக, 4.48% குறைந்து முடிவடைந்துள்ளது. இது முந்தைய அமர்வில் 188.45 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த பங்கு விலை 181.12% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த மூன்று ஆண்டில் 450.97% லாபம் கொடுத்துள்ளது. இதே கடந்த ஓராண்டில் 39.86% லாபம் கொடுத்துள்ளது. இதே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இதுவரையில் 50% வரையில் ஏற்றம் கண்டுள்ளது.
பங்கு விகிதம்
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தில் பங்கு விகிதம் புரோமோட்டர்களிடம் 66.04% ஆகவும், அன்னிய முதலீட்டாளார்களின் வசம் 0.23%மும், பொது நிறுவனம் 33.72% ஆகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications