Comfort Intech நிறுவனத்தின் பங்கு கடந்த 3 ஆண்டில் 1100 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து மல்டிபேக்கர் வருமானத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் இந்நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு பங்கு பிரிப்பு அதாவது Stock Spilt குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
Stock Spilt - 1:10 – பதிவு தேதி அறிவிப்பு!
Comfort Intech நிறுவனத்தின் இயக்குநர் குழு அதன் பங்குதாரர்களுக்கான பங்கு பிரிப்பு அறிவிப்பையும், அதன் பதிவு தேதியையும் அறிவித்துள்ளனர். அதில் செபி லிஸ்டிங் விதிமுறைகளில் 42 ஆவது விதிமுறைக்கு உட்பட்டு ரூ.10 முக மதிப்புள்ள ஈக்விட்டி பங்கிற்கும் பங்கை உட்பிரிபிற்கான பதிவுத் தேதியை ஏப்ரல் 14,2023 ஆக நிர்ணயம் செய்துள்ளது.
அதன் படி தகுதியான பங்குதாரர்களுக்கும் 1:10 என்ற அடிப்படையில் ஒவ்வொரு 10 ரூபாய் முகமதிப்புள்ள 10 ஈக்விட்டி பங்குகளை ரூ.1 முகமதிப்புடன் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.
நிகர வருவாய்!
இந்நிறுவனம் 2022 நிதியாண்டு மூன்றாம் காலாண்டில் ரூ.42.63 கோடி நிகர வருவாயை பதிவு செய்துள்ளது. இது டிசம்பர் 2022 மூன்றாம் காலாண்டில் (Q3FY22) EBIT அளவான 1.27 கோடியுடன் ஒப்பிடுகையில், டிசம்பர் 23 ஆம் காலாண்டில் (Q3FY23) ரூ.3.40 கோடியாக இருந்துள்ளது.
நிறுவனத்தின் நிகர லாபம் Q3FY22 இல் பதிவு செய்யப்பட்ட ரூ.1.26 கோடியுடன் ஒப்பிடுகையில் நிதியாண்டு 2023 மூன்றாம காலாண்டில் (Q3FY23) ரூ. 2.51 கோடியாக பதிவு செய்துள்ளது.
52 வாரத்தில் பங்கின் விலை உயர்வு-குறைவு!
Comfort Intech Ltd பங்கு 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.37.40 ஆகவும், 52 வாரத்தில் குறைந்தபட்சம் ரூ.19.80 விலையில் வர்த்தகம் செய்துள்ளது. மேலும் பங்கின் விலை பிரேக் அவுட் எனும் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தையும் அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.
மல்டிபேக்கர் வருமானம்!
கடந்த 5 ஆண்டில் இப்பங்கு 104% மல்டிபேக்கர் வருமானத்தையும், கடந்த 3 ஆண்டுகளில் 1,142.67% மல்டிபேக்கர் வருமானத்தையும் அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது.
மேலும் அதன் YTD (Year to date) அடிப்படையில் காணும்பொழுது இப்பங்கு கடந்த ஒராண்டில் 31% உயர்வையும், 2023 ஆம் ஆண்டில் மட்டும் 5% வரையும் உயர்ந்துள்ளது.
முடிவடைந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (Q3FY23) இன் போது, இந்நிறுவனம் 57.46% விளம்பரதாரர் பங்குகளையும் 42.54% பொதுப் பங்கையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comfort Intech Ltd!
Comfort Intech நிறுவனம் நாட்டில் வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) துறையில் இருக்கும் ஒரு ஸ்மால் கேப் வணிக நிறுவனமாகும். இந்நிறுவனம் விசிறிகள், ஜவுளிகள், வாட்டர் ஹீட்டர்கள் மற்றும் மோனோபிளாக் பம்புகள் உட்பட ஆனால் அவை மட்டும் அல்லாமல், மின் வணிக சந்தை தளங்களில் கார்ப்பரேஷன் தயாரிப்புகளை வர்த்தகம் செய்து வருகிறது.
முக்கிய வர்த்தகம்
மேலும் டிஸ்டில்லர்கள், உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், பாட்டில்லர்கள், விநியோகஸ்தர்கள், ஸ்டாக்கிஸ்டுகள், டீலர்கள், குடோன் கீப்பர்கள், C&F முகவர்கள், டெல்க்ரெடர் ஏஜெண்டுகள், சந்தைப்படுத்துபவர்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து வகையான மதுபானங்களின் மொத்த விற்பனையாளர்களாகவும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications