வங்கி சாராத நிதி நிறுவனமாக செயல்பட்டு வரக்கூடிய ஆத்விக் கேபிடல் நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து 3 நாட்களாக அப்பர் சர்க்யூட் நிலையை எட்டி வருகிறது. இந்த நிறுவனத்தின் 2025 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதனை அடுத்து செவ்வாய், புதன், வியாழன் என தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது அப்பர் சர்க்யூட் நிலையை எட்டியது. தற்போது ஐந்து ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமாகி வரக்கூடிய பென்னி ஸ்டாக் தான் ஆத்விக் கேபிடல் நிறுவனத்தின் பங்கு.
ஆத்விக் கேபிடல் நிறுவனத்தின் வருமானம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட காலாண்டில் 4. 15 கோடியில் இருந்து 4.97 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4.47 கோடிரூபாயாக இருந்தது.

எனவே ஓராண்டுக்கு இடைப்பட்ட காலத்திலும் காலாண்டுக்கு இடைப்பட்ட காலத்திலும் இந்த நிறுவனத்தின் வருமானம் உயர்வை கண்டுள்ளது. முன்னதாக ஆத்விக் கேபிடல் நிறுவனம் வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் வருமானம் ஓராண்டு கால வித்தியாசத்தில் மதிப்பீட்டு பார்க்கும்போது 11.20% உயர்ந்துள்ளது.
அதேபோல இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 1.30 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 2.22 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது. எனவே வருமானம் மற்றும் லாபம் என இரண்டு அளவீடுகளிலும் நிறுவனம் கணிசமான அளவு வளர்ச்சியை பெற்றுள்ளது. நிறுவனத்தின் பங்கு தற்போது மும்பை பங்குச் சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டு கிடைக்கிறது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 122 கோடி ஆகும். தற்போது இதன் டிரேட் வால்யூம் 31.40 லட்சம் ஆகும். இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 1.90 ரூபாய், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 4.35 ரூபாய். கடந்த ஒரு மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நிறுவன பங்குகளில் புரமோட்டர்கள் 21 சதவீத பங்குகளையும் சில்லறை முதலீட்டாளர்கள் 78 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications