இந்திய பங்குச் சந்தையில் ஹசூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் (Hazoor Multi Projects) என்ற பென்னி பங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 33,075% வருமானத்தை அளித்து, முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2020 ஜூன் மாதத்தில் வெறும் ரூ.0.12-ஆக இருந்த இந்த பங்கு, தற்போது மும்பை பங்குச்சந்தையில் ரூ.39.86-ஆக வர்த்தகமாகிறது.
இதில் நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அது இன்று ரூ.3.32 கோடியாக வளர்ந்திருக்கும். ஆனால், குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு இந்த பங்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது, 2025-ல் 25.59% வீழ்ச்சியை சந்தித்து, இந்த ஆண்டு பதிவான உச்ச அளவான ரூ.53.43-லிருந்து தற்போது ரூ.39.86 மட்டத்திற்கு சரிந்துள்ளது.

ஜூன் 26, 2025 அன்று, ஹசூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் பங்கு ரூ.40.22-ஆக தொடங்கியது, முந்தைய முடிவு விலையான ரூ.39.83-ஐ விட சிறிய அளவில் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இந்த பங்கு 2.41 சதவீதம் உயர்ந்து 39.17 ரூபாயாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் Hazoor Multi Projects பங்குகள் சுமார் 33,075% உயர்ந்து, நீண்டகால முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளது.
ஆனால், குறுகிய காலத்தில், கடந்த ஒரு ஆண்டில் 13% வளர்ச்சி மற்றும் கடந்த ஆறு மாதங்களில் 17% வீழ்ச்சி என, மாறுபட்ட செயல்பாட்டைக் காட்டியுள்ளது. 2025 ஆரம்பத்தில் ரூ.53.43-ஆக இருந்த பங்கு, ஜனவரி 1 முதல் கணக்கிட்டால் 25.59% சரிவை சந்தித்துள்ளது.
1992-ல் நிறுவப்பட்ட ஹசூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ், உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் செயல்படுகிறது. இந்நிறுவனம், புனேவில் பல அடுக்கு குடியிருப்பு திட்டங்கள் மற்றும் லோனாவாலாவில் ஆடம்பர பங்களா திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
மேலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மகாராஷ்டிர மாநில உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் (MSIDC) போன்றவற்றுடன் இணைந்து, சாலைகள், பாலங்கள், மற்றும் பிற கட்டுமான திட்டங்களில் பணியாற்றுகிறது. சமீபத்தில், ரூ.273.74 கோடி மதிப்பிலான MSIDC திட்டத்திற்கு மிகக் குறைந்த தொகையை முன்வைத்து ஏலத்தில் வென்றது.
2024-25 நிதியாண்டின் மார்ச் காலாண்டில், ஹசூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் ரூ.249.47 கோடி வருவாயைப் பதிவு செய்தது, இது முந்தைய ஆண்டின் ரூ.463.93 கோடியிலிருந்து 46% குறைவாகும். மேலும் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 68.89% சரிந்து, ரூ.53.94 கோடியிலிருந்து ரூ.16.78 கோடியாகக் குறைந்தது.
ஆனால், முழு ஆண்டு வருவாய் ரூ.637.68 கோடியுடன் 17% உயர்ந்தது, இருப்பினும் நிகர லாபம் ரூ.63.77 கோடியிலிருந்து ரூ.39.98 கோடியாக 37.31% குறைந்தது. மே 30, 2025 அன்று, நிறுவனம் ரூ.0.20 மதிப்புள்ள இறுதி ஈவுத்தொகையை அறிவித்தது, இது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி உயர்வு மற்றும் இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றங்கள் போன்ற பிரச்சினைகளால் இந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இத்தகைய சூழல் நிலையிலும், ஹசூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வருமானத்தை அளித்தாலும், குறுகிய காலத்தில் சரிவை சந்தித்துள்ளது மிகுந்த வருத்தைத அளிக்கிறது.
ஹசூர் மல்டி ப்ராஜெக்ட்ஸின் 33,075% லாபம் கிடைத்தாலும், இது ஒரு, பென்னி பங்குகள் அதிக முதலீட்டு ஆபத்து கொண்ட பிரிவில் வருகிறது. எனவே இதில் முதலீடு செய்யும் முன் தீவிரமாக ஆலோசனை செய்து முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
பங்குச்சந்தை முதலீட்டாளர்கள், ஹசூர் மல்டி ப்ராஜெக்ட்ஸ் போன்ற பென்னி பங்குகளில் முதலீடு செய்யும் முன், நிறுவனத்தின் நிதி நிலை, திட்டங்கள், மற்றும் சந்தை ஏற்ற இறக்கங்களை உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டும்.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications