கொரோனா காலத்தில் பார்மா துறை பங்குகளானது நல்ல ஏற்றத்தினை கண்டது. ஏனெனில் கொரோனா காலத்தில் அதன் தேவை அதிகரிக்கும் என முதலீட்டாளர்கள் தொடர்ந்து பார்மா பங்குகளாக பார்த்து பார்த்து முதலீடு செய்து வந்தனர்.
அப்படி ஏற்றம் கண்ட பங்குகளில் கவனிக்க தக்க பங்கானது ஆர்க்கிட் பார்மா தான்.

இந்த பங்கின் விலையானது 96-வது நாளாக ஆர்க்கிட் பார்மா பங்குகள் அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளன. இது கடந்த வெள்ளிக்கிழமை முடிவு விலையில் இருந்து 5% ஏற்றம் கண்டு, இன்று பிஎஸ்இயில் 1839.65 ரூபாயாக காணப்படுகிறது.
இது கடந்த நவம்பர் 3, 2020ம் ரீலிஸ்டிங் செய்யப்பட்டதில் இருந்து, இந்த பங்கின் விலையானது 102 மடங்கு அல்லது 10,120% ஏற்றம் கண்டுள்ளது. தற்போது இந்த பங்கானது பிஎஸ்இ-யில் டி குழுமத்தில் வர்த்தகமாகி வருகிறது. இதில் இண்டிராடே வணிகம் செய்ய முடியாது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 40.81 மில்லியன் அவுட்ஸ்டேண்டிங் பங்குகள் உள்ளன. இதில் 40.01 மில்லியன் பங்குகள் அல்லது 98.04% பங்குகள் அதன் விளம்பரதாரர் தனுகா ஆய்வகத்திடம் உள்ளது.
இதில் பொது பங்குதாரர்கள் இந்த நிறுவனத்தில் வெறும் 1.93% சதவீத பங்குகளை வைத்திருக்கிறார்கள். அதில் 1.19 சதவீத பங்கு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் உள்ளது. இதே தனிப்பட்ட பங்குதாரர்கள் நிறுவனத்தில் 0.51% பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்று தரவுகள் காட்டுகிறது.
ஆர்க்கிட் பார்மா இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களில் ஒன்றாகும். இது சென்னையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் 40 நாடுகளில் ஏற்றுமதியுடன், உற்பத்தி மற்றும் சந்தைபடுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications