இந்திய பங்கு சந்தையின் தந்தை என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள, சில்லறை விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகின்றது.
இது இந்தியா முழுவதும் 136 நகரங்களில் 598 ஸ்டோர்களைக் கொண்டுள்ளது. இவற்றில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 211 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இந்த பங்கின் விலையானது 20% வரை அதிகரித்துள்ளது.
பல பிராண்டுகள்
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பிரத்யேக ஸ்டோர்களை கொண்ட மிகப்பெரிய நிறுவனமான மெட்ரோ பிராண்ட் உள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் சில்லறை காலணி வணிகத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. குறிப்பாக நடுத்தர, பிரீமிய ரக காலணிகளில் கவனம் செலுத்தி வருகின்றது.
மல்டி பிராண்டுகள்
இந்த நிறுவனத்தின் முதல் ஷோரூம் மும்பையில் கடந்த 1955ம் ஆண்டு தொடக்கப்பட்டதாகும். இது ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தேவையான காலணிகள், பெல்ட்கள், பைகள், காலுறைகள் என பல பிராண்டுகள் என பரந்து விரிந்த ஒரு விற்பனையாளராக உள்ளது.
இன்றைய பங்கு விலை
மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது என் எஸ் இ-ல் இன்றைய முடிவில் 19.11% அதிகரித்து, 605 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 609 ரூபாயாக இருந்த உச்ச விலை, இன்றைய குறைந்தபட்ச விலை 545 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இதே பி எஸ் இ-யில் 19.46% அதிகரித்து, 606.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 609.45 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலையாக 543.10 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது. 52 வார உச்ச விலை 609.45 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலை 426.10 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.
லாபம் அதிகரிப்பு
மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனம் டிசம்பர் காலண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 54.63% அதிகரித்து, 100.85 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 65.22 கோடி ரூபாயாக இருந்தது. இதனையடுத்து தான் இந்த நிறுவன பங்கின் விலையானது உச்சம் தொட்டுள்ளது.
இன்று தொடக்கம்
கடந்த 9 தினங்களில் மட்டும் இப்பங்கின் விலையானது 39.15% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று காலை தொடக்கத்தில் பி எஸ் இ-ல் 550 ரூபாயாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதே என் எஸ் இ-ல் 545 ரூபாயாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
வருவாய் அதிகரிப்பு
இதே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாயானது 59.02% அதிகரித்து, 483.77 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 304.21 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் செலவினமும் 47.26% அதிகரித்து, 362.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 246.21 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜுன் ஜுன்வாலா வசம்
இந்த நிறுவனத்தின் மூன்றாவது பெரிய பங்குதாரராக இருக்கும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் வசம், டிசம்பர் காலாண்டு முடிவில் 14.42% பங்குகள் உள்ளது.
இன்றைய உச்சம் 609.45 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனம் 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக இருந்து வருகின்றது. நடப்பு ஆண்டில் மட்டும் இந்த நிறுவன பங்கின் விலையானது 32.75% ஏற்றம் கண்டுள்ளது.
அனுமதி
மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனம் அதன் பொருட்களை பிரத்யேக பிரான்ட் ஷோரூம்கள், மல்டி பிராண்ட் ஸ்டோர்கள், ஏர்போர்ட் ஸ்டோர்கள், டிஸ்ட்ரிபியூஷன், ஆன்லைன் விற்பனை வெப் ஸ்டோர்கள் என பலவற்றிலும் விற்பனை செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுவும் இந்த நிறுவன பங்கின் விலையானது உச்சம் தொட காரணமாக அமைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications