ஒரு வருடத்தில் 500% லாபம்.. சரிகம இந்தியா கொடுத்த லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..!

சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் 500% அதிகமான வருமானத்தினை அதன் பங்குதாரர்களுக்கு கொடுத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த ஆண்டு ஜூன் 22, 2020 அன்று 429 ரூபாயாக இருந்த நிலையில், இன்று அதன் விலையானது 2,720 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது.

இந்த காலக்கட்டத்தில் பெஞ்ச் மார்க் குறியீடான சென்செக்ஸ் கூட 51% தான் ஏற்றம் கண்டுள்ளது.

நல்ல லாபம்

நல்ல லாபம்

ஆக கடந்த ஆண்டில் இந்த பங்கில் உதாரணத்திற்கு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், 230 பங்குகள் வாங்கியிருக்கலாம். இன்றைய மதிப்பு 5 லட்சம் ரூபாய்க்கு மேல். உங்களின் ஒரு பங்கிற்கு 2291 ரூபாய் லாபம் கிடைத்திருக்கும். கொரோனா காலகட்டத்திலும் கூட, இந்த பங்கின் விலையானது நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது.

நடப்பு ஆண்டில் நல்ல ஏற்றம்

நடப்பு ஆண்டில் நல்ல ஏற்றம்

குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த பங்கின் விலையானது 223% அதிகரித்துள்ளது. இன்று இந்த பங்கின் விலையானது 2730 உச்சமாகவும், 2685 ரூபாய் குறைந்தபட்ச விலையாகவும் தொட்டுள்ளது. இதே இந்த பங்கின் 52 வார உச்ச விலை 2735.65 ரூபாயாகவும், குறைந்த விலை 406.30 ரூபாயாகவும் உள்ளது.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

இதற்கிடையில் டெக்னிக்கலாக பார்க்கும்போது இந்த பங்கின் விலையானது 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜீக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. கடந்த 12 மாதங்களில் இப்படி எனில், கடந்த மார்ச் 2020ல் இந்த பங்கின் விலையானது 181 ரூபாயில் இருந்து, தற்போது 2,700 ரூபாய்க்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது.

14 மடங்கு ஏற்றம்

14 மடங்கு ஏற்றம்

கடந்த மார்ச் மாத குறைந்தபட்ச விலையில் இருந்து 14 மடங்கு ஏற்றம் கண்டுள்ளது. எனினும் இந்த பங்கின் விலையானது ஓவர் பாட் லெவலில் இருப்பதால், கட்டாயம் ஒரு லாபத்தில் ஸ்டாப் லாஸ் போட்டு வைப்பது நல்லது. அல்லது டிரெயில் ஸ்டாப் லாஸ் போட்டு வைக்கலாம். ஏனெனில் ஒரு வேளை லாபத்தினை புக் செய்ய முதலீட்டாளர்கள் விற்றால், விலை குறையலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மீடியம் டெர்மில் குறையலாம்

மீடியம் டெர்மில் குறையலாம்

மீடியம் டெர்மில் 2,400 ரூபாய் என்பது சப்போர்ட் லெவலாக உள்ளது. தினசரி பேட்டர்ன் ஏற்கனவே சற்றே செல்லிங்கிற்கு திரும்பியுள்ள நிலையில், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆக இந்த பங்கு 23.6% ரிவர்ஸ் பேட்டர்ன் கண்டால் 2,146 ருபாய் என்ற லெவலுக்கும், 38.2% சரிந்தால் 1781 ரூபாய் என்ற லெவலுக்கும் கூட குறையலாம். ஆக கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நிகரலாபம்

நிகரலாபம்

இந்த நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் 37 கோடி ரூபாய் நிகர லாபத்தினை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 14.84 கோடி ரூபாய் லாபத்தினை மட்டுமே ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் வருவாய் 13.6% அதிகரித்து 123.46 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 108.6 கோடி ரூபாயாக கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+