இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் சில நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை தருபவையாகவே இருக்கின்றன. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் 30000 சதவீதம் உயர்வு கண்ட ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு குறித்து தான் இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
Jyoti Resins என்ற நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் 30,016 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதாவது 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 4 ரூபாயாக இருந்தது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதன் ஒரு பங்கு மதிப்பு 1,240 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2015 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்தவர்களுக்கு தற்போது அதன் மதிப்பு 3 கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது.

10 ஆண்டுகளில் 30,000 சதவீதம் லாபம் தந்த ஒரு பங்காக இது மாறி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 76 சதவீதம் என உயர்ந்திருக்கிறது. 1490 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்ட ஜோதி ரெசின்ஸ் நிறுவனத்தின் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் 2000 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜோதி ரெசின்ஸ் நிறுவனம் இந்தியாவில் சிந்தட்டிக் ரெசின்கள் மற்றும் மர வேலைகளுக்கான பசைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு 1993 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் 14 மாநிலங்களில் 42 கிளைகளுடன் இந்நிறுவனம் செயல்படுகிறது.12000 சில்லரை விற்பனை நிலையங்களும், 3 லட்சத்திற்கும் அதிகமான மர சாமான் வியாபாரிகளும் இந்நிறுவன வாடிக்கையாளர்களாக உள்ளன.
இந்தியாவில் சில்லரை விற்பனை பிரிவில் மரப் பொருட்களுக்கான பசைகளை தயாரித்து வழங்கும் முதன்மையான நிறுவனமாக இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை பொருத்தவரை 2024 ஆம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இதன் வருமானம் 62 கோடியாக இருந்தது இதுவே 2025 ஆவது ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 71 கோடியாக உயர்ந்து இருக்கிறது. அதாவது வருமானம் 14 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் லாபமும் ஓர் ஆண்டு காலத்தில் 18.75 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இந்த நிறுவன பங்குகளில் 50 சதவீதம் பிரமோட்டோர்கள் வசம் இருக்கிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

போருக்கு நடுவில் குத்தாட்டம்! சென்செக்ஸ் 2350 புள்ளிகள் உயர உண்மை காரணம் என்ன? பங்குகளில் முதலீடு செய்யலாமா?

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

அந்தர் பல்டி அடித்த அதானி டோட்டல் கேஸ் பங்குகள்.. முதலீட்டாளர்கள் ஷாக்..!!

கதறி கதறி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. ஈரான் போரின் கோரமுகம் இந்தியாவில் எதிரொலி..!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

PPF Vs SIP: 10 வருஷத்துல யாரு கிங்? ரூ.1.5 லட்சத்தை எதில் போட்டால் கோடீஸ்வரர் ஆகலாம்?



Click it and Unblock the Notifications