இந்திய பங்குச் சந்தையில் டாடா குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்கு என்றால் கண்களை மூடிக்கொண்டு வாங்கிவிடலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் டாடா குழும பங்கு ஒன்று நான்கு ஆண்டுகளில் சுமார் 700 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது.
டாடா குழுமத்திற்கு சொந்தமான இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி எனப்படும் ஐஹச்சிஎல் (IHCL) நிறுவனத்தின் பங்கு கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 700 சதவீதம் உயர்ந்துள்ளது. ஹோட்டல்கள் உள்ளிட்ட ஹாஸ்பிடிலாட்டி துறையை சேர்ந்த இந்நிறுவனம் கொரோனா காலகட்டத்தில் மிகப்பெரிய சரிவை கண்டது.

கொரோனா பெருந்தொற்று முடிவடைந்து உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பியதை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் துறை மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
குறிப்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா அதிகரித்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் மீண்டும் ஹாஸ்பிடாலிட்டி துறைகள் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. இதன் ஒரு பகுதியாகத்தான் சர்வதேச தரகு நிறுவனமான பிலிப் கேப்பிட்டல் (Philip capital) இந்தியாவில் ஹோட்டல் துறை சார்ந்த நிறுவனங்களை நம்பி முதலீடு செய்யலாம் என தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹோட்டல்களில் அறைகள் பதிவு முன்பதிவு செய்யப்படும் விகிதம் கொரோனாவுக்கு முன்பு இருந்த விகிதத்தை விட உயர்ந்து விட்டது எனக் கூறியுள்ளது.
இதன் காரணமாக ஐஹச்சிஎல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு வளர்ச்சி பாதையில் இருக்கும் என பிலிப் கேப்பிட்டல் தெரிவித்துள்ளது. ஐஹச்சிஎல் நிறுவனம் உணவு டெலிவரி மற்றும் உணவகங்கள் , பிசினஸ் கிளப்புகளை செயல்படுத்துவது மற்றும் கேட்டரிங் தொழில் ஆகியவற்றிலும் ஈடுபட தொடங்கி இருக்கிறது. எனவே ஒன்றில் சரிவு இருந்தாலும் மற்றவை அதை ஈடு கட்டிவிடும் என பிலிப் கேப்பிடல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஐஹச்சிஎல் நிறுவனத்தின் வருமானத்தை பொறுத்தவரை 16% சதவீதம் அதிகரிக்கும் என பிலிப் கேப்பிட்டல் கணிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக 2025ஆம் ஆண்டுக்குள்ளயே இந்த நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என்றும் கூறியுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கினை வாங்கலாம் என்று மதிப்பீட்டில் வைத்திருக்கும் பிலிப் கேப்பிட்டல் , இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 704 ரூபாய் என்ற அளவிற்கு உயரும் என தெரிவித்துள்ளது.
இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 87,192 கோடி ஆகும். இந்த நிறுவனத்தின் பங்கின் ஃபேஸ் வேல்யு 1, புக் வேல்யூ 66.4, ஈக்விட்டிக்கு எதிரான இந்த நிறுவனத்தின் கடன் அளவு பூஜ்ஜியம் 0. 29 ஆக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருவாய் 2024 ஆம் ஆண்டு 6,952 கோடி ரூபாயாகவும் இதன் லாபம் 1,202 கோடி ரூபாயாகவும் இருக்கிறது.
இந்த நிறுவன பங்குகளில் 38 சதவீதம் புரமோட்டோர்களிடமும், 24 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்கள் வசமும் உள்ளன. இந்த பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 371 ரூபாய் , 52 வார கால அதிகபட்ச மதிப்பு 663 ரூபாய் ஆகும். ஜூலை 5ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 613 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

அம்பானி, அதானி, டாடா வந்தாச்சு, பிர்லா மட்டும் மிஸ்சிங்! ஆர்சிபி அணியை வாங்கி IPL-ல் குதித்த பிர்லா குடும்பம்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications