இந்த வாரம் 9 நிறுவனங்கள் மொத்தம் ரூ.7,000 கோடி திரட்டும் நோக்கில் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளன. இதனால் இந்த வாரம் இந்தியாவின் முதன்மை சந்தை மிகவும் பரப்பரப்பாக இருக்கும். பிரதான மற்றும் எஸ்எம்இ பிரிவுகளில் மொத்தம் 9 நிறுவனங்களின் ஐபிஓக்கள் வரும் நாட்களில் தொடங்குகின்றன. இதில் ஸ்க்லோஸ் பெங்களூரு மற்றும் ஏஜிஸ் வோபாக் டெர்மினல்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஐபிஓக்கள் பிரதான பிரிவை சேர்ந்தவை. இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டும் மொத்தமாக ரூ.6,300 கோடிக்கு மேல் திரட்டும் எண்ணத்தில் ஐபிஓவை மேற்கொள்கின்றன. எஞ்சிய 7 நிறுவன ஐபிஓக்களும் எஸ்எம்இ ஐபிஓக்கள்.
ஸ்க்லோஸ் பெங்களூரு
ஸ்க்லோஸ் பெங்களூரு நிறுவனம் லீலா பிராண்டின் கீழ் ஆடம்பர ஹோட்டல்களை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறது. இந்நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.413-435 விலை வரம்பில் ரூ.3,500 கோடி ஐபிஓவை மே 26ம் தேதி தொடங்குகிறது. இந்த ஐபிஓ வரும் புதன்கிழமை நிறைவடைகிறது.

ஏஜிஸ் வோபாக் டெர்மினல்ஸ்
சேமிப்பு மற்றும் சரக்குபோக்குவரத்து நிறுவனமான ஏஜிஸ் வோபாக் டெர்மினல்ஸின் ரூ.2,800 கோடி ஐபிஓ நாளை தொடங்குகிறது. இந்நிறுவன ஐபிஓவில் ஒரு பங்கின் வெளியீட்டு விலை வரம்பு ரூ.223-235ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன ஐபிஓ வரும் 28ம் தேதி நிறைவடைகிறது. இந்த 2 நிறுவனங்களும் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ பட்டியலிடப்படும்.
புரோஸ்டார்ம் இன்ஃபோ சிஸ்டம்ஸ்
எஸ்எம்பி பிரிவில் ஏராளமான நிறுவனங்கள் ஐபிஓவை மேற்கொள்கின்றன. அதில் முக்கியமான நிறுவனம் புரோஸ்டார்ம் இன்ஃபோ சிஸ்டம்ஸ். இ்ந்நிறுவனம் நாட்டின் முன்னணி யுபிஎஸ் மற்றும் இன்வெர்ட்டர் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையராக விளங்குகிறது. இந்நிறுவனம் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ வாயிலாக ரூ.168 கோடி திரட்டும் நோக்கில் ஐபிஓவை மேற்கொள்கிறது. இந்நிறுவனத்தின் ஐபிஓ மே 27ம் தேதி தொடங்குகிறது.
ப்ளூ வாட்டர் லாஜிஸ்டிக்ஸ்
கடல் மற்றும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ப்ளூ வாட்டர் லாஜிஸ்டிக்ஸ். இந்நிறுவனம் ரூ.40.50 கோடி மதிப்பிலான ஐபிஓவை மேற்கொள்கிறது. இந்நிறுவனத்தின் ஐபிஓ மே 27ம் தேதியன்று தொடங்குகிறது.
அஸ்டோனியா லேப்ஸ்
மருந்து நிறுவனமான அஸ்டோனியா லேப்ஸின் ஐபிஓ வரும் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்குகிறது. இ்ந்நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டு அளவு ரூ.37.67 கோடியாகும்.
ஸ்கோடா டியூப்ஸ்
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஸ்கோடா டியூப்ஸ் நிறுவனத்தின் ரூ.220 கோடி மதிப்பிலான ஐபிஓ மே 28ம் தேதியன்று தொடங்குகிறது. அதே தினத்தில் ஜவுளித்துறையை சேர்ந்த என்ஆர் வந்தனா டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (ரூ.27.89 கோடி) ஐபிஓவும் திறக்கப்படுகிறது. பெட்ரோகெமிக்கல் தயாரிப்புகள் உற்பத்தி, பிராசசிங் உள்ளிட்ட வணிகத்தில் ஈடுபட்டு வரும் நெப்டியூன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ (ரூ.73.20 கோடி) மே 28ம தேதி தொடங்குகிறது.
நிகிதா பேப்பர்ஸ்
பேப்பர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிகிதா பேப்பர்ஸ் நிறுவனம் ரூ.67.54 கோடி திரட்டும் நோக்கில் மே 27ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டை மேற்கொள்கிறது.
ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைத்து பணிநீக்கம் செய்யும் வால்மார்ட்.. பெங்களூரு பணியாளர் வேதனை
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications