கடந்த 2ம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் 10 சதவீதம் விதித்தார் மேலும், அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட இந்தியா உள்பட சுமார் 60 நாடு்கள் மீது கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்தார். இதனால் சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,050.23 புள்ளிகள் அல்லது 2.64 சதவீதம் சரிவை சந்தித்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 614.8 புள்ளிகள் அல்லது 2.61 சதவீதம் வீழ்ச்சி கண்டது.
இந்நிலையில் வரும் வாரத்தில் பங்குச் சந்தைகள் எப்படி இருக்குமோ என்ற கலக்கத்தில் முதலீ்ட்டாளர்கள் உள்ளனர். இந்திய ரிசர்வ வங்கியின் நிதிக கொள்கை கூட்டம், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் பணவீக்கம் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தக்தின் போக்கினை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்று நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். இந்த நிதியாண்டின் முதல் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவின் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை வரும் 9ம் தேதியன்று ரிசர்வ் வங்கி வெளியிடும்.

இந்த கூட்டத்தில் ரிசர்வ வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரம் முதல், கடந்த மார்ச் காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளை நிறுவனங்கள் வரிசையாக வெளியிட உள்ளன. டிசிஎஸ தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் மற்றும் இறுதி டிவிடெண்ட் அறிவிப்பை வரும் 10ம் தேதி வெளியிட உள்ளது. ஏப்ரல் 11ம் தேதியன்று கடந்த மாா்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் வெளிவருகிறது. அதற்கு அடுத்த நாள் கடந்த பிப்ரவரி மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரம் வெளியாக உள்ளது.
கடந்த வாரம் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் சுமார் ரூ.13,730 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். கடந்த வாரம் பங்குச் சந்தையின் சரிவுக்கு இதுவும் முக்கிய காரணம். அதேசமயம் கடந்த உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.5,632 கோடி நிகர முதலீடு செய்து இருந்தனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குகளில் முதலீடு செய்ய தொடங்கினால் பங்குச் சந்தைகளின் நிலவரம் மாறும். இது தவிர அமெரிக்காவின் பணவீக்கம் குறித்த புள்ளவிவரம், அமெரிக்க பெடரல் வங்கியின் முக்கிய செய்திகள், சீனாவின சில்லரை விலை பணவீக்கம், இங்கிலாந்தின் பிப்ரவரி மாத ஜிடிபி குறித்த புள்ளிவிவரம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச பொருளாதாரம் புள்ளிவிவரங்கள் இந்த வாரம் வெளிவருகிறது.
மேலும்,டிரம்பின் பரஸ்பர விதியின் எதிர்விளைவுகள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, தங்கத்தின் விலை போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!



Click it and Unblock the Notifications