இந்திய பங்குச்சந்தையில் நிலவி வரும் நிச்சயமற்ற போக்கிற்கு மத்தியிலும், டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) நிறுவனத்தின் பங்குகள் இன்று (செப்.23) வர்த்தகத்தில் சுமார் 14 சதவீதம் உயர்ந்து முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
டைகர் லாஜிஸ்டிக்ஸ் பங்குகள் முந்தைய நாளான திங்கட்கிழமை ரூ.46.31-ல் முடிவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ.46.73-ல் வர்த்தகத்தை தொடங்கியது. அதிகபட்சமாக ரூ. 52.99 வரை உயர்ந்து, 14.42 சதவீத வளர்ச்சியை எட்டியது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை சரிவில் இருந்த போதும் இந்த பங்கு மட்டும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் பெற்று தந்தது.

இந்த நிறுவன முதலீட்டாளர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற உள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட எதிர்பார்ப்பே முதலீட்டாளர்களின் ஈர்ப்பைப் பெற காரணம். இந்த கூட்டம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புதன்கிழமை "அரிஹந்த் கேபிடல் – பாரத் கனெக்ட் கான்ஃபரன்ஸ் ரைசிங் ஸ்டார் 2025" நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில், நிறுவனத்தின் வணிகம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் டைகர் லாஜிஸ்டிக்ஸ் பங்குகள் கணிசமான ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளன. செப்டம்பர் 17 அன்று 20 சதவீதம் உயர்ந்த இந்த பங்கு, அடுத்த நாளான செப்டம்பர் 18 அன்று மேலும் 7 சதவீதம் அதிகரித்தது. ஆனால், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் முறையே 2 சதவீதம் மற்றும் 8 சதவீதம் சரிந்தன.
பங்குகளின் விலையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றங்கள் குறித்து செப்டம்பர் 19 அன்று பிஎஸ்இ (BSE) நிறுவனம் விளக்கம் கோரியது. இதற்குப் பதிலளித்த டைகர் லாஜிஸ்டிக்ஸ், தற்போதைக்கு முக்கியமான, பங்கு விலையை பாதிக்கும் எந்தவிதமான தகவல்களும் இல்லை என்று செப்டம்பர் 20 அன்று தெளிவுபடுத்தியது.
மேலும், பங்குகள் சமீபத்தில் என்எஸ்இ (NSE) தளத்தில் நேரடியாகப் பட்டியலிடப்பட்டதால்தான், குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்து, வர்த்தகப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நிறுவனம் சுட்டிக்காட்டியது.
டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனப் பங்கின் விலை கடந்த ஆண்டு டிசம்பர் 10 அன்று ரூ.80.44 என்ற 52 வார உச்சத்தை எட்டியது. அதேசமயம், இந்த ஆண்டு செப்டம்பர் 5 அன்று ரூ.39.10 என்ற 52 வார குறைந்தபட்ச விலையை பதிவு செய்தது. 2024 மார்ச் 4 அன்று, இந்த பங்கு 1:10 விகிதத்தில் பிரிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கு ரூ. 1 முகமதிப்பு கொண்ட பத்து பங்குகளாக மாறியது. நாளை நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அறிந்து இதில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை முதலீட்டாளர்கள் எடுத்து கொள்ளலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications