இந்திய நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.86 என வியாழக்கிழமை வரலாறு காணாத சரிவை எட்டிய நிலையில், வெள்ளிக்கிழமை 5 பைசா வரை உயர்ந்து 68.46 வரை உயர்ந்தது.
இதன் மூலம் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி முடிந்து விட்டது என நாம் கணித்து விட முடியாது.

டிசம்பர் 30 வரையில் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடரும் நிலையில், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கியின் நாணய கொள்கையில் வட்டி உயர்விற்கான முடிவுகள், ஜனவரி 20ஆம் தேதி டொனால்டு டிரிம்ப்-இன் பதவியேற்பு என இந்திய ரூபாய் மதிப்பைப் பாதிக்கும் பல காரணிகள் வரிசை கட்டி நிற்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களைப் பார்க்கும்போது ஜனவரி மாத முடிவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications