டாடா குரூப்: Titan பங்குகள் அடுத்த 15 நாட்களில் 80% உயரும்.. காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டைட்டன் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டு முடிவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டைட்டனின் வணிகத்தில் கணிசமான பகுதியைக் கொண்டுள்ள நகைப் பிரிவு, ஆண்டுக்கு 16 சதவிகிதம் வலுவான வருவாய் வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டைட்டன் நிறுவனத்தின் பங்கு அதிகளவில் உயரும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே, லார்ஜ்கேப் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் கொண்ட பங்குகளில் டைட்டன் நிறுவன பங்குகளும் அதிகளவில் உள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் இஸ்ரேல் - ஈரான் பதற்றம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. எனவே, இன்றைய பங்குச் சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், சென்செக்ஸ், நிஃப்டி கடுமையாக சரிந்துள்ளன. இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் நல்ல மதிப்பீடுகளைக் கொண்ட லார்ஜ் கேப் பங்குகளின் மீது கவனம் செலுத்துகின்றனர்.

டாடா குரூப்: Titan பங்குகள் அடுத்த 15 நாட்களில் 80% உயரும்.. காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

டாடா குழும நிறுவனமான டைட்டனின் பங்குகள் கடந்த சில மாதங்களாக நிலையான வர்த்தகம் கண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வரவிருக்கும் இரண்டாம் காலாண்டு முடிவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 23 ஜூலை 2024 அன்று சமர்ப்பிக்கப்பட்ட முழு பட்ஜெட்டில் , நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தது டைட்டன் நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு பெரும் ஆதரவை அளித்தது வருகிறது.

ஜூன் 2013க்குப் பிறகு மிக குறைவான வரி இது என்பதால் தங்க நகை விற்பனை சூடுப்பிடித்துள்ளது. இந்த வரி குறைப்பு தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோக நகைகளில் உள்நாட்டு மதிப்பை அதிகரிக்கவும், கடத்தலை எதிர்த்துப் போராடவும் மற்றும் மக்கள் தங்கத்தை எளிதில் வாங்குவதற்கு ஏற்றார்போல் மாற்றவும் மத்திய அரசு வரியை குறைத்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு, டைட்டன் நிறுவனம் போன்று மக்கள் மத்தியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நகை உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் பெரும் பலன் அடைந்துள்ளது, என்றால் மிகையில்லை.

அந்த வகையில், ப்ரோக்கரேஜ் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, டைட்டன் மீது BUY மதிப்பீட்டை கொடுத்துள்ளது. இது அடுத்த 15 நாட்களில் நிறுவனத்தின் பங்கின் விலை 80 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியமாந காரணம் இந்தியாவில் துவங்கியுள்ள பண்டிகை காலம் மற்றும் திருமண சீசன் தான்.

மோர்கன் ஸ்டான்லி-யின் சமீபத்திய கணிப்பின்படி, டைட்டன் நிறுவனத்தின் நகைப் பிரிவு வருடாந்திர அடிப்படையில் 16 சதவீத வருவாய் வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது. இது ஜூலை மாதத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேவை அதிகரிப்பால் டைட்டன் நிறுவனத்தின் விற்பனையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வியாழன் அன்று பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரிய சரிவுக்கு மத்தியில், டைட்டன் கம்பெனி லிமிடெட் பங்குகள் 0.50 சதவீதம் சரிவுடன் ரூ.3,758 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

ட்ரெண்ட்லைனில், 18 ஆய்வாளர்கள் டைட்டன் நிறுவனத்தின் பங்குகளை வாங்க (Buy)மதிப்பிட்டுள்ளனர். இதில், 12 ஆய்வாளர்கள் Strong Buy என்றும், 6 ஆய்வாளர்கள் Buy மதிப்பீட்டை வழங்கியுள்ளனர். கடந்த ஒரு மாதமாக, டைட்டன் நிறுவனப் பங்குகள் நிலையாக இருந்ததால், அவற்றின் பிளாட் பாசிட்டிவ் இயக்கம் காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+