நாட்டின் முன்னணி பங்குத் தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸின் துணைத் தலைவர் தர்மேஷ் ஷா, லார்ஜ் கேப் வகையைச் சேர்ந்த 2 பங்குகளுக்கு இலக்கு விலையுடன் வாங்கும் மதிப்பீடு குறித்து பரிந்துரைத்துள்ளார். அந்த 2 பங்குகள் பட்டியலில், முதலாவது ஐடி துறையைச் சேர்ந்த இன்ஃபோசிஸ் லிமிடெட் மற்றும் இரண்டாவது வங்கித் துறையைச் சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி லிமிடெட் ஆகும். திங்கட்கிழமை வர்த்தகத்தில் இந்த 2 லார்ஜ் கேப் பங்குகள் நல்ல லாபத்தை அளிக்க வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்களுக்கு தர்மேஷ் ஷா பரிந்துரை செய்துள்ளார்.
இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆனது லார்ஜ் கேப் வகை ஐடி துறை பங்கு ஆகும். இதன் பங்குகள் வாங்கும் மதிப்பையும், இலக்கு விலையையும் முன்னணி பங்கு ஆய்வாளர் தர்மேஷ் ஷா பரிந்துரை செய்துள்ளார். அதன்படி, இன்ஃபோசிஸ் லிமிடெட் பங்கு ஒன்றுக்கு ரூ. 2110 இலக்கு விலையுடன் வாங்குதல் மதிப்பீட்டை அவர் வழங்கியுள்ளார். மேலும் இந்தப் பங்கிற்கு ரூ. 1810 நிறுத்த இழப்பையும் தர்மேஷ் ஷா வழங்கியுள்ளார். மேலும் இந்த பங்கு ரூ.1943 விலையில் வாங்கவும் பரிந்துரைக்கிறார்.

கடந்த வர்த்தக அமர்வில், இன்ஃபோசிஸ் லிமிடெட் பங்கு விலை சுமார் 0.38 சதவீதம் குறைந்து ரூ. 1943 இல் முடிந்தது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 1975.75 ஆகவும், அதே போல் 52 வாரங்களில் இல்லாத ரூ. 1351.65 ஆகவும் இருந்தது. பங்கு விலை கடந்த ஒரு வாரத்தில் சுமார் 2 சதவீதமும், கடந்த மாதத்தில் சுமார் 5 சதவீதமும், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 19 சதவீதமும், கடந்த ஆண்டில் சுமார் 29 சதவீதமும், கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 134 சதவீதமும் உயர்ந்துள்ளது . தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 8,05,000 கோடியாக உள்ளது.
லார்ஜ்கேப் வங்கித் துறை பங்குகளான இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகளை வாங்கும் மதிப்பையும், இலக்கு விலையையும் முன்னணி பங்கு ஆய்வாளர் தர்மேஷ் ஷா பரிந்துரைத்துள்ளார். அதில், இதன் பங்கு ரூ. 1620 இலக்கு விலையுடன் வாங்குதல் மதிப்பீட்டையும் பரிந்துரைத்துள்ளார். மேலும் இந்தப் பங்கிற்கு ரூ. 1330 நிறுத்த இழப்பையும், இந்த பங்கு ரூ. 1462 விலையில் வாங்கவும் ஆய்வாளர் பரிந்துரைத்துள்ளார்.
கடந்த வர்த்தக அமர்வில், இண்டஸ் இண்ட் வங்கியின் பங்கின் விலை சுமார் 1.33 சதவீதம் அதிகரித்து ரூ. 1462.50 இல் நிறைவடைந்தது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 1694.50 ஆகவும், 52 வாரங்களில் இல்லாத ரூ. 1329.20 ஆகவும், பங்கு விலை கடந்த ஒரு வாரத்தில் சுமார் 4 சதவீதமும், கடந்த மாதத்தில் சுமார் 7 சதவீதமும், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 2 சதவீதமும், கடந்த ஆண்டில் சுமார் 1 சதவீதமும், கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 5 சதவீதமும் உயர்ந்துள்ளது . தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1,14,000 கோடியாகவும் உள்ளது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications