சென்னை: அண்மை காலமாக மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் மக்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக வரி சேமிப்புக்கு உதவும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் வெறும் வரி சேமிப்புக்கு மட்டுமல்ல, உங்கள் முதலீட்டையும் இரட்டிப்பாக்குகின்றன.
இந்த திட்டங்களில் உங்களின் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு மூன்று ஆண்டுகளில் எவ்வளவு ரிட்டர்ன் தருகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

குவாண்ட் ஈஎல்எஸ்எஸ் ஃபண்டு (Quant ELSS Tax Saver Fund): உங்களின் முதலீட்டை மூன்று ஆண்டுகளில் 2.35 மடங்காக அதிகரிக்கும் திட்டம் இது. இதன் XIRR என்பது 33.03% ஆக இருக்கிறது. எனவே இந்த திட்டத்தில் ஒரே முறை முதலீடாக 1.5 லட்சம் ரூபாயை நீங்கள் செலுத்தி இருந்தால் அது மூன்று ஆண்டுகளில் 3.53 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
எஸ்பிஐ லாங்-டெர்ம் ஈக்விட்டி ஃபண்டு (SBI Long-term Equity Fund): நீண்ட காலமாக சந்தையில் இருக்கும் வரி சேமிப்புக்கான ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டம் இது. இது உங்கள் முதலீட்டை 2.02 மடங்கு அதிகரிக்கும். இதன் XIRR 26.46% ஆக உள்ளதால் உங்களின் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு மூன்று ஆண்டுகளில் 3.03 லட்சமாக அதிகரித்திருக்கும்.
ஹெச்டிஎஃப்சி ஈஎல்எஸ்எஸ் (HDFC ELSS Tax Saver Fund): இந்த திட்டத்தின் XIRR என்பது 25.36% ஆக உள்ளது. எனவே உங்களின் முதலீட்டை மூன்று ஆண்டுகளில் 1.97 மடங்கு அதிகரிக்கும். அதாவது 1.5 லட்சம் ரூபாய் முதலீடு 3 ஆண்டுகளில் 2.95 லட்சமாக உயர்ந்திருக்கும்.
பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India ELSS Tax Saver Fund): இந்த வரி சேமிப்பு பரஸ்பர நிதி திட்டத்தின் XIRR என்பது 23.98% ஆக உள்ளது. எனவே உங்களின் முதலீட்டை மூன்று ஆண்டுகளில் 1.91 மடங்கு அதிகரிக்கும். அதாவது 1.5 லட்சம் ரூபாய் முதலீடு 3 ஆண்டுகளில் 2.85 லட்சமாக உயர்ந்திருக்கும்.
பராக் பரிக் (Parag Parikh ELSS Tax Saver Fund): இந்த முதலீட்டு திட்டம், உங்களின் முதலீட்டு தொகையை 1.85 மடங்கு அதிகரிக்கும். அதாவது இதன் XIRR என்பது 22.80% ஆக உள்ளது. எனவே உங்களின் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு, மூன்று ஆண்டுகளில் 2.77 லட்சமாகி இருக்கும்.
பந்தன் டேக்ஸ் சேவர் ஃபண்டு (Bandhan ELSS Tax Saver Fund): இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டம் முதலீட்டை 1.82 மடங்கு உயர்த்தும் திறன் கொண்டது. உங்களின் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு, மூன்று ஆண்டுகளில் 2.72 லட்சமாகி இருக்கும்.
மோதிலால் ஓஸ்வால் (Motilal Oswal ELSS Tax Saver Fund): இந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தின் XIRR என்பது 21.59%. எனவே உங்களின் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு 3 ஆண்டுகளில் 2.69 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும்.
ஃபிராங்கிளின் இந்தியா (Franklin India ELSS Tax Saver Fund): உங்களின் முதலீட்டை மூன்று ஆண்டுகளில் 1.78 மடங்காக அதிகரிக்கும் திட்டம் இது. இதன் XIRR என்பது 21.02% ஆக இருக்கிறது. எனவே இந்த திட்டத்தில் ஒரே முறை முதலீடாக 1.5 லட்சம் ரூபாயை நீங்கள் செலுத்தி இருந்தால் அது மூன்று ஆண்டுகளில் 2.67 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
ஜேஎம் (JM ELSS Tax Saver Fund): இந்த முதலீட்டு திட்டம், உங்களின் முதலீட்டு தொகையை 1.72 மடங்கு அதிகரிக்கும். அதாவது இதன் XIRR என்பது 19.88% ஆக உள்ளது. எனவே உங்களின் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு, மூன்று ஆண்டுகளில் 2.58 லட்சமாகி இருக்கும்.
Story Written By: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications