கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது, 1,91,434.41 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
இதில் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், இரண்டாவது இடத்தில் இன்ஃபோசிஸ், அடுத்த இடத்தில் டிசிஎஸ் நிறுவனமும் உள்ளது.
எனினும் இந்த வாரத்தில் ஐசிஐசிஐ வங்கி மட்டும் தனி லூசராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் ஏற்றம்
இது இந்த வார தொடக்கத்தில் உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் , பேச்சு வார்த்தையில் சமாதானம் ஏற்படலாம் என்ற பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியிலும், 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 இடங்களில் ஆளும் கட்சியே பெரும்பான்மை இடத்தில் வெற்றியும் பெற்றுள்ளது. இது சந்தையில் ஏற்றத்திற்கு வழிவகுத்தது. கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 1216.49 புள்ளிகள் அதிகரித்து அல்லது 2.23% அதிகரித்தும் காணப்பட்டது.
டாப் 10 நிறுவனங்கள்
இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 49,492.7 கோடி ரூபாய் அதிகரித்து, 16,22,543.06 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 2,399.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 41,553.59 கோடி ரூபாய் அதிகரித்து, 7,66,447.27 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 1822 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
டிசிஎஸ்
இதே போல டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 27,927.84 கோடி ரூபாய் அதிகரித்து, 13,31,917.43 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 0.60% குறைந்து, 3599.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 22,956.67 கோடி ரூபாய் அதிகரித்து,3,81,586.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று குறைந்து, 694.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 17,610.19 கோடி ரூபாய் அதிகரித்து, 4,92,204.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலையானது சற்று குறைந்து, 2094.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி-வங்கியின் சந்தை மூலதனம் 16,853.02 கோடி ரூபாய் அதிகரித்து, 7,74,463.18 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 1396.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 7,541.3 கோடி ரூபாய் அதிகரித்து, 4,19,813.73 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 470.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 5,308.61 கோடி ரூபாய் அதிகரித்து, 4,00,014.04 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 6628 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி
இதே ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனம் 2210.49 கோடி ரூபாய் அதிகரித்து, 4,04,421.20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் சற்று குறைந்து,2230 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி
இதற்கிடையில் டாப் 10 நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு மட்டும், 7023.32 கோடி ரூபாய் குறைந்து, 4,71,047.52 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் சற்று அதிகரித்து, 677.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications