நடப்பு 2024ம் ஆண்டின் முதல் அரையாண்டு இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ளது. இந்த முதல் அரையாண்டில் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகத்தில் கடும் ஏற்ற இறக்கம் நிலவியது.
மக்களவை தேர்தல், அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் போர் போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நிலையில்லாமல் இருந்தது. இருப்பினும் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் பங்குச் சந்தைகள் ஏறுமுகத்தில் இருந்தது.

இந்த காலத்தில் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 9 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அதேசமயம் நிப்டி ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் இன்டெக்ஸ் தலா 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
2024ம் ஆண்டின் முதல் அரையாண்டில், பல நிறுவன பங்குகள் மல்டிபேக்கர் வருமானத்தை கொடுத்துள்ளன. குறிப்பாக, ரூ.1,000 கோடிக்கும் அதிக சந்தை மதிப்பு கொண்ட 85 நிறுவனங்கள் 100 சதவீதம் முதல் சுமார் 800 சதவீதம் வரை முதலீட்டாளர்களுக்கு ஆதாயத்தை கொடுத்துள்ளன.
இதில், ஐ.டி., டெலிகாம், டெக்ஸ்டைல், மின்சாரம், பொறியியல் சாதனங்கள், ரசானயங்கள், வேளாண் மற்றும் உள்கட்டமைப்பு உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவன பங்குகளும் இடம் பிடித்துள்ளன. அதில் அதிக ஆதாயம் கொடுத்த டாப் 10 நிறுவன பங்குகள் இதோ.
மார்சன்ஸ்: உள்நாட்டு நிறுவனமான மார்சன்ஸ் மின் மாற்றிகள் உள்ளிட்ட மின் உபகரணங்களை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவன பங்கு முதல் அரையாண்டில் இந்நிறுவன பங்கின் விலை 797.94 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.65.51ஆக இருந்தது.
டின்னா டிரேட்: பிரபலமான டின்னா குழுமத்தை சேர்ந்த நிறுவனம் டின்னா டிரேட். இந்நிறுவன பங்கு இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் முதலீட்டாளர்களின் பணத்தை 718.86 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.361.15ஆக இருந்தது.
டைமண்ட் பவர் இன்ப்ராஸ்ட்ரக்சர்: இந்நிறுவனம் மின் பரிமாற்ற உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவன பங்கு 673.91 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,269.25ஆக இருந்தது.
பொண்டாடா இன்ஜினியரிங்: தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு துறையை சேர்ந்த இந்நிறுவன பங்கின் விலை இந்த ஆண்டின் முதல் பாதியில் 651.91 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.2,562.00ஆக இருந்தது.
ஏராயா லைப்ஸ்பேஸ்: ஸ்மால் கேப் பங்கான ஏராயா லைப்ஸ்பேஸ், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு 573.89 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.800ஆக இருந்தது.
ஸ்ப்ரைட் அக்ரோ: மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.49.44ஆக இருந்தது. நடப்பு முதல் அரையாண்டில் இந்நிறுவன பங்கின் விலை 523.55 சதவீதம் உயர்ந்துள்ளது.
வசுபக்னானி இண்டஸ்ட்ரீஸ்: இந்நிறுவனம் படத் தயாரிப்பு மற்றும் அது சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவன பங்கின் விலை 476.7 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.331.10ஆக இருந்தது.
கேசர் இந்தியா: கேசர் இந்தியா ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் இந்நிறுவன பங்கின் விலை 465.58 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.820.00ஆக இருந்தது.
டால்பின் ஆஃப்ஷோர் என்டர்பிரைசஸ்: இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையை சேர்ந்த நிறுவனங்களுக்கு நீருக்கடியில் சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவன பங்கு கணக்கீடு காலத்தில் முதலீட்டாளர்களின் பணத்தை 463.5 சதவீதம் பெருக்கியுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.700ஆக இருந்தது.
வாரீ ரீனியூவபிள் டெக்னாலஜிஸ்: மின் துறையை சேர்ந்த இந்நிறுவன பங்கின் விலை இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் 395.61 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.1,905.00ஆக இருந்தது.
Story written by: Subramanian
More From GoodReturns

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications