போன வருஷம் ரூ.1 லட்சம் முதலீடு செஞ்சிருந்தா ரூ.9 கோடி கிடைத்திருக்கும்.. 2024-ன் டாப் 10 பங்குகள்..!

மும்பை: 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வர கூடிய இந்த தருவாயில் இந்திய பங்குச் சந்தையில் எந்தெந்த நிறுவனங்களின் பங்குகள் எல்லாம் மல்டி பேக்கர்களாக மாறி முதலீட்டாளர்களுக்கு பெருமளவில் லாபமீட்டி தந்தன என்பதை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

டிசம்பர் 11ஆம் தேதி நிலவரப்படி ACE Equity என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்திய பங்குச்சந்தையின் பெஞ்ச்மார்க் குறியீடான பிஎஸ்சி சென்செக்ஸ் நடப்பு ஆண்டில் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, குறிப்பாக மும்பை பங்குச் சந்தையில் ஸ்மால் கேப் குறியீடு 39 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாம்.

போன வருஷம் ரூ.1 லட்சம் முதலீடு செஞ்சிருந்தா ரூ.9 கோடி கிடைத்திருக்கும்.. 2024-ன் டாப் 10 பங்குகள்..!


ஸ்ரீ அதிகாரி பிரதர்ஸ் டெலிவிஷன் நெட்வொர்க் (Sri Adhikari Brothers Television Network) என்ற நிறுவனம் மீடியா துறையில் இயங்கி வருகிறது. திரைப்பட தயாரிப்பு , விநியோகம் என்பன உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.4 ரூபாயாக இருந்து தற்போது 2,013 ரூபாய் என உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 8 கோடியாக இருந்து தற்போது 5,465 கோடி ரூபாய் என வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு இந்த நேரம் ஒரு நபர் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 9 கோடி ரூபாயாக இருந்திருக்கும்.

மார்ஷன்ஸ் (Marsons) என்ற நிறுவனம் மின்சார உபகரணங்களை தயாரித்து வழங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்த ஓராண்டு காலத்தில் 2763 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு வெறும் 8 ரூபாய்க்கு விற்கப்பட்ட இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு தற்போது 241 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 4,148 கோடி ரூபாய் ஆகும்.

அடுத்ததாக இந்த பட்டியலில் இருப்பது பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் (Bharat Global Developers). இந்த நிறுவனம் இந்த ஓராண்டு காலத்தில் 2041 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது .இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 42 ரூபாயாக இருந்து தற்போது 1073 ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 10,870 கோடி ரூபாய் என அதிகரித்துள்ளது.

எராயா லைஃப் ஸ்பெசஸ் (Eraaya Lifespaces) என்ற நிறுவனத்தின் பங்கு மதிப்பு இந்த ஓராண்டு காலத்தில் 1935% லாபம் பெற்று தந்துள்ளது. கடந்தாண்டு இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 8 ரூபாய் என இருந்து தற்போது 179 ரூபாய் என உயர்ந்துள்ளது.

கல்வி துறையில் இயங்கி வரக்கூடிய வேண்டேஜ் நாலேஜ் அகாடமி (Vantage Knowledge Academy) என்ற நிறுவனத்தின் பங்கு மதிப்பும் இந்த ஓராண்டு காலத்தில் 1823% உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 11 ரூபாயாக இருந்து தற்போது 222 ரூபாய் என உயர்ந்துள்ளது.

நிதி துறை சார்ந்த எண் வரக்கூடிய ஆஷிகா கிரெடிட் கேப்பிடல் (Ashika Credit Capital) என்ற நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 48 ரூபாயாக இருந்தது தற்போது அது 859 ரூபாய் என உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு 1675 சதவீத லாபத்தை தந்துள்ளது.

அடுத்ததாக கேபிள் இண்டஸ்ட்ரியில் இருக்கக்கூடிய டைமண்ட் பவர் (Diamond Power Infrastructure) நிறுவனம் 1238% கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மதிப்பு 12 ரூபாயாக இருந்து தற்போது 159 ரூபாய் என அதிகரித்துள்ளது.

சிஐஏஎன் அக்ரோ (CIAN Agro Industries & Infrastructure ) என்ற நிறுவனம் சமையல் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 37 ரூபாயாக இருந்தது தற்போது 434 ரூபாய் என உயர்ந்துள்ளது.

ஐடி துறை சார்ந்து இயங்கி வரக்கூடிய டெக் அண்ட் விஷன் நிறுவனம் (TechNVision Ventures ) முதலீட்டாளர்களுக்கு 882 சதவீத லாபம் தந்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 358 ரூபாய் தற்போது 3,516 ரூபாய் என உயர்ந்துள்ளது.

ரியல் எஸ்டேட் பிரிவில் இயங்கி வரக்கூடிய ஆர்டிபி நிறுவனத்தின் (RDB Infrastructure and Power) பங்கு மதிப்பு 68 ரூபாயிலிருந்து தற்போது 581 என உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் இந்த ஓராண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 754 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது.

இறுதியாக போண்டாடா இன்ஜினியரிங் (Bondada Engineering) என்ற டெலிகாம் உள்கட்டமைப்பு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 741 சதவீத லாபத்தை தந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 82 ரூபாயாக இருந்து தற்போது 689 ரூபாய் என அதிகரித்துள்ளது.


Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+