இந்த 10 நிறுவனங்களிலும் அவங்க ராஜ்யம்தான்.. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கி குவித்த முக்கிய பங்குகள்..!

இந்திய பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு கணிசமாக உள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கி குவித்தால் அது சந்தையின் ஏற்றத்துக்கு வழிவகுக்கும்.

அதேசமயம், அவர்கள் தொடர்ந்து பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தால் அது சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் ஒட்டு மொத்த அளவில் 5.81 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இது முந்தைய காலாண்டைக் காட்டிலும் சிறிது குறைவாகும். செப்டம்பர் காலாண்டில் இது 5.89 சதவீதமாக இருந்தது.

இந்த 10 நிறுவனங்களிலும் அவங்க ராஜ்யம்தான் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வாங்கி குவித்த முக்கிய பங்குகள்

ப்ரைம்இன்போபேஸ் டாட் காம் தரவுகளின்படி,360 ஒன் வாம், பேடிஎம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நிறுவனங்களில் அந்நிறுவனங்களின் நிறுவனர்களை காட்டிலும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிக பங்கு மூலதனத்தை கொண்டுள்ளனர்.

அந்த வகையில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிக பங்கு மூலதனம் டாப் 10 பங்குகளை பார்ப்போம். அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிக பங்கு மூலதனம் கொண்ட நிறுவனங்களில் 360 ஒன் வாம் முதலிடத்தில் உள்ளது. 2024 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, 360 ஒன் வாம் நிறுவனத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 66.15 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளனர்.

2024 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, லீ டிராவென்ஸ் டெக்னாலஜி (Ixigo) நிறுவனத்தின் 61.07 சதவீத பங்குகள் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வசம் உள்ளது. கடந்த டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, ரெடிங்டன் நிறுவனத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 58.53 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளனர்.

இந்த நிதியாண்டின் 3வது காலாண்டு நிலவரப்படி, ஃபைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 57.76 சதவீத பங்குகளை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர். கடந்த டிசம்பர் இறுதி நிலவரப்படி, சிஏஎம்எஸ் நிறுவனத்தில் 57.63 சதவீத பங்குகள் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வசம் உள்ளது.

2024 டிசம்பர் இறுதி நிலவரப்படி, மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 56.93 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளனர். கடந்த டிசம்பர் காலாண்டு நிலவரப்படி, பேடிஎம் நிறுவனத்தில் 56.2 சதவீத பங்குகள் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வசம் உள்ளது.

2024 டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, கார்டிரேடு டெக் நிறுவனத்தின் 55.12 சதவீத பங்குகளை அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வாங்கி வைத்துள்ளனர். கடந்த டிசம்பர் இறுதி நிலவரப்படி, சம்ஹி ஹோட்டல்ஸ் நிறுவனத்தில் 54.76 சதவீத பங்கு மூலதனம் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வசம் உள்ளது. இந்த நிதியாண்டின் 3வது காலாண்டு நிலவரப்படி, டெலிவரி நிறுவனத்தின் 53.75 சதவீத பங்குகள் அன்னிய நிறுவன முதலீட்டாளர்களிடம் உள்ளன.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+