இந்திய பங்குச்சந்தையின் 'ராக்ஸ்டார்' ஆன ரிலையன்ஸ், இன்போசிஸ்...!

மும்பை: அமெரிக்க, ஐரோப்பிய, சீனா சந்தைகளால் இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு வாரமாகப் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது, ஆனால் பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியிலும் இந்திய சந்தையில் தனக்கு இருந்த சாதகமான வர்த்தகச் சூழ்நிலையில் டாப் 10 நிறுவன பட்டியலில் 4 நிறுவனங்களும் மட்டும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுச் சந்தையில் அதன் மதிப்பு 35,000 கோடி ரூபாய் வரை உயர்ந்தது.

அந்த 4 நிறுவனங்கள்

அந்த 4 நிறுவனங்கள்

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் மொத்த மதிப்பு 35,000 கோடி ரூபாய் வரை உயர்ந்தது.

சரிவடைந்த நிறுவனங்கள்

சரிவடைந்த நிறுவனங்கள்

டாப் 10 பட்டியில் இருக்கும் மேலே குறிப்பிட 4 நிறுவனங்களைத் தவிர எச்டிஎப்சி வங்கி, ஐடிசி, ஒஎன்ஜிசி, எச்டிஎப்சி, எஸ்பிஐ மற்றும் சிஐஎல் ஆகிய நிறுவனங்கள் 22,852.31 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு மதிப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கடந்த ஒருவார காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முதலீட்டு மதிப்பு 24,619.79 கோடி ரூபாய் உயர்ந்து 4,08,238.80 கோடி ரூபாயாக உயர்ந்தது.

இதன் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் மார்ச் 31 முதல் தனது இலவசங்களை முடித்துக்கொண்டு ஏப்ரல் 1 முதல் வருமானம் ஈட்ட உள்ளதாக அறிவித்தது. இதன் வாயிலாக இந்நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர்.

 

இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ்

இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ்

இவ்விரு நிறுவனங்களும் இந்திய சந்தையில் தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வரும் நிலையில் முதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுச் சந்தை வர்த்தகத்தில் இருக்கும் பங்குகளை வாங்க முடிவு செய்தது, இதன் காரணமாக இவ்விரு நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் உயர்ந்தது.

இதன் காரணமாகக் கடந்த ஒரு வார வர்த்தகத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5,076.25 கோடி ரூபாய் உயர்ந்து 2,36,849.45 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதேபோல் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 2,108.36 கோடி ரூபாய் உயர்ந்து 4,91,099.61 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் நிறுவனப் பங்கு மதிப்பில் டிசிஎஸ் முதல் இடத்தைத் தக்கவைத்துள்ளது.

 

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்

இந்நிலையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4,071.91 கோடி ரூபாய் உயர்ந்து 1,89,841.91 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்த வாரம் வர்த்தகம்

இந்த வாரம் வர்த்தகம்

அமெரிக்க அரசு சிறப்பு அவசர பிரிவின் கீழ் வழங்கப்படும் எச்1பி விசா திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ள காரணத்தாலும், சீனா மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருந்து அதிக முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் காரணத்தால், இந்த வார வர்த்தகம் மந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+