2025ம் ஆண்டு தொடக்கம் இந்திய பங்குச் சந்தைகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. பங்குச் சந்தைகள் சரிவின் பாதையில் காணப்படுகிறது. குறிப்பாக, இந்த ஆண்டில் இதுவரை (24ம் தேதி வரை) சென்செக்ஸ் மற்றும் நிப்டி சுமார் தலா 3 சதவீதம் சரிவு கண்டன. பிஎஸ்இ500 குறியீட்டு இதுவரை 5.17 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. பிஎஸ்இ500 குறியீட்டில் அதிக சரிவை சந்தித்த 5 நிறுவன பங்குகளை பார்ப்போம்.

கல்யாண் ஜூவல்லர்ஸ்
நாட்டின் பிரபலமான சங்கிலித்தொடர் நகை விற்பனை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் சுமார் 41 சதவீதம் சரிவு கண்டுள்ளது. மோதிலால் ஓஸ்வால் ஏஎம்சி நிறுவனத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு, நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நடந்ததாக வெளியான தகவல்களால் இப்பங்கின் விலை தாறுமாறாக குறைந்தது.
நியுஜென் சாப்ட்வேர் டெக்
சாப்ட்வேர் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நியுஜென் சாப்ட்வேர் டெக் நிறுவனத்தின் பங்கு விலை இந்தாண்டில் இதுவரை 31 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்நிறுவனத்தின் கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருந்ததே இதற்கு காரணம். நிதி நிலை முடிவுகள் அதிருப்தி அளிப்பதாக இருந்ததால், கடந்த 21ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 18 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
சையண்ட்
ஐடி துறையை சேர்ந்த சையண்ட் நிறுவன பங்கின் விலை கடந்த 24ம் தேதி 20 சதவீதம் சரிந்தது. இதற்கு முக்கிய காரணம், அந்நிறுவனத்தின் வருவாய் வழிகாட்டுதல் மதிப்பீட்டில் குறைப்பு மற்றும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்த்திகேயன் நடராஜ் ராஜினாமா செய்தது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 24.94 சதவீதம் குறைந்துள்ளது.
டெக்னோ எலக்ட்ரிக் அண்ட் இன்ஜினீயரிங் கம்பெனி
எலக்ட்ரிக் சேவைகள் நிறுவனமான டெக்னோ எலக்ட்ரிக் அண்ட் இன்ஜினீயரிங் கம்பெனி பங்கு விலை இந்த ஆண்டில் இதுவரை 34.92 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. தற்போது இப்பங்கு அதன் 100 மற்றும் 200 நாள் சராசரியை விடக் குறைவான விலையில் வர்த்தகமாகி வருகிறது. இது இப்பங்கு விலை ஒரு நிலையான சரிவில் இருப்பதை வெளிப்படுத்துகிறது.
சோபா
ரியல் எஸ்டேட் நிறுவனமான சோபா பங்கின் விலை இந்த ஆண்டில் இதுவரை சமார் 29 சதவீதம் குறைந்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் எதிர்கால வருவாய் கணிப்பு மீது அனைவரது கவனமும் உள்ளது. கணிப்பு நேர்மறையாக இருந்தால் வரும் நாட்களில் பங்கு விலை உயர வாய்ப்புள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications