மோதிலால் ஆஸ்வால் தரகு நிறுவனம் 6 நிறுவனங்களின் பங்குகளை பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையில் டாபர் இந்தியா, இமாமி, ஜோதி லேப்ஸ், மாரிக்கோ, டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ், யுனைடெட் ப்ரூவரீஸ் உள்ளிட்ட பங்குகள் அடங்கும்.
இந்த பங்குகள் 26% வரையில் வருமானம் கொடுக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

டாபர் இந்தியா: டாபர் இந்தியா பங்கினை பொறுத்தவரையில் இலக்கு விலையாக 640 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது. இது பிஎஸ்இ-யில் ஒரு பங்கின் விலையானது 547.30 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது. நீங்கள் இந்த டாபர் இந்தியா பங்கினை வாங்கினால் 17% வரையில் லாபம் கிடைக்கலாம். லார்ஜ் கேப் நிறுவனமான இந்த எஃப்.எம்.சி.ஜி நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 96,968.61 கோடி ரூபாயாக காணப்படுகின்றது. இப்பங்கின் விலையானது கடந்த 1 வருடத்தில் 0.95% ஏற்றத்திலும், 3 ஆண்டுகளில் 285 ஏற்றத்திலும், 5 ஆண்டுகளில் 62% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.
இமாமி: மற்றொரு எஃப் எம் சி ஜி நிறுவனமான டாபர் இந்தியா பங்கின் விலை சுமார் 360.45 ரூபாயாக உள்ளது. இதன் இலக்கு விலையாக 440 ரூபாயாக நிபுணர்கள் கணித்துள்ளனர். இப்பங்கானது தற்போதைய சந்தை விலையில் இருந்து 22% ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது. இதன் 52 வார உச்ச விலையானது 524.95 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 340.95 ரூபாயாகும். இப்பங்கானது கடந்த 1 ஆண்டில் 20% சரிவினைக் கண்டும், 3 ஆண்டுகளில் 97% வருமானமும் கொடுத்துள்ளது.
ஜோதி லேப்ஸ்: ஜோதி லேப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது ஒரு பங்கிற்கு 188.25 ரூபாயாக காணப்படுகின்றது. இப்பங்கின் இலக்கு விலையாக 210 ரூபாயினை நிபுணர்கள் நிர்ணயித்துள்ள நிலையில், இப்பங்கானது தற்போதைய சந்தை விலையில் இருந்து 12% வருமானம் கொடுக்கலாம். இதன் 52 வார உச்ச விலையானது 222.90 ரூபாயாகும். இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 142 ரூபாயாகும். இப்பங்கானது கடந்த 1 ஆண்டில் 26% லாபம் கண்டும், 3 ஆண்டுகளில் 98% வருமானமும் கொடுத்துள்ளது.

மாரிக்கோ: பி எஸ் இ-யில் 480.40 ரூபாய் என்ற லெவவில் வர்த்தகமாகி வரும் இந்த பங்கின் இலக்கு விலையாக நிபுணர்கள் 590 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இதன் மூலம் சுமார் 23% வரையில் வருமானம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சந்தை மூலதனமானது 62,119.77 கோடி ரூபாயாக உள்ளது. இப்பங்கானது கடந்த 1 ஆண்டில் 17% லாபம் கண்டும், 3 ஆண்டுகளில் 83% வருமானமும் கொடுத்துள்ளது.
டாடா கன்சியூமர்: டாடா குழுமத்தினை சேர்ந்த கன்சியூமர் நிறுவனமான டாடா கன்சியூமர் நிறுவனத்தின் இலக்கு விலையாக 900 ரூபாயாக நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். இதன் தற்போதைய சந்தை விலை 716.95 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளனர். இதன் பங்கு 26% வரையில் வருமானம் கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 66,605.49 கோடி ரூபாய் சந்தை மதிப்பினை கொண்ட இந்த நிறுவனம் கடந்த 1 ஆண்டில் 9% சரிவினைக் கண்டும், 2 ஆண்டுகளில் 10% வருமானமும், 3 ஆண்டுகளில் 168% வருமானமும் கொடுத்துள்ளது. இதே 5 ஆண்டுகளில் 161% வருமானம் கொடுத்துள்ளது.
யுனைடெட் ப்ரூவரீஸ்: யுனைடெட் ப்ரூவரீஸ் நிறுவன பங்கினை விற்பனை செய்ய கூறும் நிபுணர்கள், இலக்கு விலையாக 1210 ரூபாயினை கொடுத்துள்ளனர். இதன் தற்போதைய சந்தை விலை 1431.55 ரூபாயாகும். இதன் சந்தை விலை 37,850.92 கோடி ரூபாயாகவும் உள்ளது. இப்பங்கானது கடந்த 1 ஆண்டில் 4% சரிவினைக் கண்டும், 2 ஆண்டுகளில் 15% வருமானமும், 3 ஆண்டுகளில் 61% வருமானமும் கொடுத்துள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications