செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகப் பொருளாதாரத்தை மாற்றி வருகிறது. இதனாலேயே ஏஐ துறை சார்ந்த முதலீடுகள் தற்போது பெரும் வாய்ப்பாக மாறியுள்ளது. இந்த நிலையில் இந்திய முதலீட்டாளர்கள் நேரடியாக அமெரிக்க AI நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாவிட்டாலும், மியூச்சுவல் பண்ட் மூலம் எளிதாக AI வளர்ச்சியில் பங்கு பெறலாம்.
இப்படி AI துறை சார்ந்த நிறுவன பங்குகளில் (என்விடியா, மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான், ஆல்பபெட், மெட்டா) அதிக முதலீடு வைத்திருக்கும் டாப் 7 மியூச்சுவல் பண்டுகளைப் டிரேட் பிரைன்ஸ் பட்டியலிட்டு உள்ளது. இந்த மியூச்சுவல் பண்டுகள்பெரும்பாலும் அமெரிக்க NASDAQ மற்றும் S&P 500 குறியீடுகளைப் பின்பற்றுபவை.

மிரே அசெட் NYSE FANG+ ETF:
இந்த பண்ட் 79.23 சதவீதம் AI தொடர்புடைய பங்குகளில் முதலீடு செய்கிறது. வெறும் 10 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யும் இது, ஒரு ஆண்டில் 53.04 சதவீதமும், மூன்று ஆண்டுகளில் 345.15 சதவீதமும் லாபம் தந்துள்ளது. இதன் AUM ரூ.3,652 கோடி, செலவு விகிதம் 0.65 சதவீதம். AI-இல் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
மிரே அசெட் S&P 500 டாப் 50 ETF:
அமெரிக்காவின் மிகப்பெரிய 50 நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த பண்ட் 63.86 சதவீதம் AI தொடர்புடைய பங்குகளில் முதலீடு செய்கிறது. ஒரு ஆண்டு லாபம் 37.92 சதவீதம், மூன்று ஆண்டுகளில் 160.14 சதவீதம். இதன் AUM ரூ.1,004 கோடி. இது AI உடன் பிற துறைகளையும் சமநிலைப்படுத்துவதால் ஏஐ பபுள் வெடிக்கும் காலத்தில் பாதிப்பு பாதியாக குறையும்.
மோதிலால் ஓஸ்வால் NASDAQ-100 ETF:
NASDAQ-100 குறியீட்டைப் பின்பற்றும் இந்த பண்ட் 53.38 சதவீதம் AI தொழில்நுட்ப பங்குகளில் முதலீடு செய்கிறது. ஒரு ஆண்டு லாபம் 34.26 சதவீதம், மூன்று ஆண்டுகளில் 145.33 சதவீதம். இதன் AUM ரூ.11,317 கோடி, செலவு விகிதம் வெறும் 0.58 சதவீதம்.
ICICI ப்ரூடென்ஷியல் NASDAQ 100 இன்டெக்ஸ் பண்ட்
என்விடியா, மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்றவை முக்கிய பங்குகளில் முதலீடு செய்துள்ள இந்த ICICI ப்ரூடென்ஷியல் NASDAQ 100 இன்டெக்ஸ் பண்ட் 52.90 சதவீதம் AI சார்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இந்த பண்ட் ஒரு ஆண்டில் 34.54 சதவீத லாபம் தந்துள்ளது. AUM ரூ.2,665 கோடி. எக்ஸிட் லோடு இல்லை என்பது கூடுதல் நன்மை.
பிற முக்கிய பண்டுகள்:
மோதிலால் ஓஸ்வால் S&P 500 இன்டெக்ஸ் பண்ட் 40.11 சதவீதம் AI பங்குகளுடன் உள்ளது.
பராக் பரிக் ப்ளெக்ஸி கேப் பண்ட் 11.50 சதவீதம் AI பங்குகளை (ஆல்பபெட், மைக்ரோசாப்ட், அமேசான்) வைத்திருக்கிறது.
SBI போகஸ்ட் பண்ட் ஆல்பபெட்டில் 7.94 சதவீதம் முதலீடு செய்துள்ளது. இவை AI உடன் இந்திய பங்குகளையும் சேர்த்து சமநிலை தருகின்றன.
AI முதலீட்டுக்கு ஏன் இந்த பண்டுகள் சிறந்தவை?
இந்தியாவில் நேரடியாக AI நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாது. ஆனால் இந்த ETF மற்றும் இன்டெக்ஸ் பண்டுகள் அமெரிக்க NASDAQ, S&P 500 குறியீடுகளைப் பின்பற்றுவதால், என்விடியா, மைக்ரோசாப்ட் போன்ற AI நிறுவனங்களில் மறைமுகமாக முதலீடு செய்யலாம். இவை பேசிவ் பண்டுகள் என்பதால் செலவு குறைவு, லாபம் அதிகம். நீண்டகால (5-10 ஆண்டு) முதலீடு செய்பவர்களுக்கு இவை சிறந்த தேர்வாக விளங்குகிறது.
இந்திய முதலீட்டாளர்கள் AI வளர்ச்சியில் பங்கு பெற இந்த பண்டுகள் எளிய, பாதுகாப்பான வழி. SIP மூலம் ரூ.500 முதல் தொடங்கலாம். AI தொழில்நுட்பம் வளர வளர இந்த பண்டுகள் மேலும் லாபம் தரும் என்பது நிபுணர்களின் கருத்து.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications