இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடையே எதிர்பார்ப்பு மிகக் குறைவாக உள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்-க்கு முன்பு வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலையாக இருக்கும் என உத்தரவாதம் கொடுக்கப்பட்ட இதேவேளையில், பணவீக்கம் தொடர்பான பாதிப்புகள் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோல் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பதிவான பிரம்மாண்ட வளர்ச்சி மற்ற துறையிலும் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளது. இதை தாண்டி ஏஐ குறித்து அதிகளவில் பேசியுள்ளது. இதை பார்க்கும் போது இந்த பட்ஜெட் எப்படியிருக்கும் என்பதில் பெரும் குழப்பம் உள்ளது.

இதற்கிடையில் இந்தியாவில் இயங்கி வரும் முக்கியமான ப்ரோகரேஜ் நிறுவனங்கள் நாளை பட்ஜெட் எப்படி இருக்கும், பங்குச்சந்தையில் வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது குறித்து முக்கியமான கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
பொதுவாக பட்ஜெட் நாளில் பங்குச்சந்தை வர்த்தகம் பெரிய அளவில் பாதித்தது. ஆனால் இந்த முறை பல புரோக்கரேஜ் நிறுவனங்கள் இதை குறைந்த தாக்கம் கொண்ட நிகழ்வு (low-impact event) என்று கருதுகின்றன.
ஜனவரி மாதத்தில் நிஃப்டி 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 2 சதவீதத்திற்கும் அதிகமாக இழந்த நிலையில், இந்த பட்ஜெட் சந்தைக்கு பெரிய திசை மாற்றத்தை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளின் தரவுகளின்படி, பட்ஜெட் நாளில் நிஃப்டி சராசரியாக 0.19 சதவீதம் மட்டுமே மாறுபட்டு உள்ளது. ஆனால் பட்ஜெட்டுக்கு அடுத்த வாரத்தில் பெரிய அளவில் உயர்வை பதிவு செய்துள்ளது. இதனால் பட்ஜெட் நாள் சந்தைக்கு பெரிய தாக்கம் ஏற்படுத்தாது என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதேபோல் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும் காரணத்தால் பங்குச்சந்தையில் FII முதலீட்டாளர்களின் பங்கீடு என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க உள்நாட்டு முதலீட்டாளர்கள் கையில் தான் உள்ளது.
ஜெஃபரீஸ் புரோக்கரேஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பில், 2026-27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் வழக்கம் போல் மத்திய அரது அரசாங்கம் தனது வரவுக்கும் செலவுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, நிதி நிலையை வலுப்படுத்துவது என்று கூறுகிறது. மேலும் இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் இதேவேளையில் நிதி ஒழுங்குமுறையை மத்தியில் சமநிலை வைத்திருப்பதை முக்கியமானதாக பார்க்கும்.
இதனால் பெரிய கொள்கை அறிவிப்புகள் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கிறது. அரசு மூலதன செலவு (capex) 10 சதவீதத்திற்கு மேல் உயரலாம். பாதுகாப்பு துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் பாதுகாப்பு தவிர்த்த பிற துறைகளில் மூலதன ஒதுக்கீட்டில் 5-10 சதவீதம் மட்டுமே வளர்ச்சி இருக்கும். இது பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கத்தை தராது என விளக்கியுள்ளது
இதேபோல் மோதிலால் ஓஸ்வால் நிறுவனம், முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு ஏற்கனவே குறைவாக உள்ளது என்று கூறுகிறது. அரசு நிதி இலக்குகள், புவிசார் பதற்றங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் பெரிய நடவடிக்கைகள் எதுவும் இருக்காது என தெரிவித்துள்ளது.
மேலும் எம்கே குளோபல் நிறுவனம் இந்த பட்ஜெட்-ஐ "இந்திய பங்குச் சந்தைக்கு குறைந்த தாக்கம் கொண்ட நிகழ்வு" என்று அழைக்கிறது. கடந்த ஆண்டில் அரசு எடுத்த நடவடிக்கைகள் ஏற்கனவே வளர்ச்சியை தூண்டியுள்ளதால் புதிய பெரிய அறிவிப்புகள் தேவையில்லை என்று கூறுகிறது.
இந்த பட்ஜெட் சந்தைக்கு பெரிய திசை மாற்றத்தை தராது என்றாலும், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது நிலையான சூழலை உருவாக்கும். நிஃப்டி ஜனவரி இழப்பை ஈடுகட்டி சிறிய லாபத்துடன் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications