இந்திய பங்குச் சந்தைகளான பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய சந்தைகளில், நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு விலை இருக்கும். அதே போல, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். ஆங்கிலத்தில் Market Capitalization என்று சொல்வோம்.
அதாவது இன்றைய பங்கு விலைக்கு, அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு (Market Capitalization) என்கிறோம்.

இன்று பங்குச் சந்தையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளின் விலை 1509-க்கு நிறைவு அடைந்து இருக்கிறது. இந்த விலை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வாழ்நாள் அதிகம். ஆக, 633.9 கோடி பங்குகள் * 1509.8 = 9.57 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்டு இருக்கிறது. இது இந்திய வரலாற்றிலேயே புதிய உச்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயரத்தை இதுவரை எந்த ஒரு இந்திய நிறுவனமும் தொட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து வேறு எந்த நிறுவனங்கள் எல்லாம் இருக்கின்றன என பார்ப்போமா..?
| இந்தியாவில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியல் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | இன்றைய குளோசிங் விலை | 52 வார அதிகம் | 52 வார குறைந்த விலை | மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 1,509.80 | 1,509.80 | 1,017.00 | 957,086.22 |
| 2 | TCS | 2,108.30 | 2,290.65 | 1,784.00 | 791,115.27 |
| 3 | HDFC Bank | 1,274.75 | 1,285.00 | 942.20 | 697,761.76 |
| 4 | HUL | 2,036.95 | 2,187.00 | 1,522.00 | 440,961.39 |
| 5 | HDFC | 2,213.15 | 2,357.00 | 1,646.00 | 382,143.53 |
| 6 | ICICI Bank | 493.15 | 509.60 | 310.30 | 318,684.49 |
| 7 | Kotak Mahindra | 1,623.30 | 1,682.40 | 1,099.00 | 310,069.97 |
| 8 | ITC | 249.35 | 310.00 | 234.10 | 306,363.63 |
| 9 | Infosys | 712.80 | 847.40 | 600.65 | 303,539.62 |
| 10 | SBI | 330.30 | 373.70 | 244.35 | 294,779.92 |
| 11 | Bajaj Finance | 4,137.10 | 4,256.30 | 2,000.80 | 248,924.78 |
| 12 | Bharti Airtel | 439.25 | 439.25 | 254.29 | 225,425.73 |
| 13 | Maruti Suzuki | 7,044.00 | 7,929.00 | 5,447.00 | 212,785.19 |
| 14 | Axis Bank | 747.85 | 826.55 | 534.15 | 210,842.39 |
| 15 | Larsen | 1,365.35 | 1,606.70 | 1,183.40 | 191,637.98 |
| 16 | ONGC | 133.15 | 178.95 | 115.55 | 167,506.42 |
| 17 | Asian Paints | 1,722.65 | 1,833.65 | 1,119.60 | 165,236.21 |
| 18 | HCL Tech | 1,134.45 | 1,190.00 | 920.15 | 153,897.60 |
| 19 | Bajaj Finserv | 9,160.00 | 9,160.00 | 4,960.00 | 145,769.76 |
| 20 | Wipro | 250.85 | 301.55 | 220.50 | 143,308.27 |
| 21 | Nestle | 14,107.25 | 15,150.00 | 9,205.00 | 136,016.06 |
| 22 | IOC | 133.00 | 170.40 | 116.10 | 125,208.31 |
| 23 | Coal India | 199.55 | 288.30 | 177.80 | 122,977.24 |
| 24 | UltraTechCement | 4,107.00 | 4,903.90 | 3,263.70 | 118,533.82 |
| 25 | NTPC | 117.35 | 145.85 | 106.75 | 116,112.63 |
| 26 | Avenue Supermar | 1,841.05 | 2,010.80 | 1,126.95 | 115,250.97 |
| 27 | HDFC Life | 570.25 | 646.40 | 345.00 | 115,057.75 |
| 28 | BPCL | 519.35 | 547.50 | 261.00 | 112,660.14 |
| 29 | Titan Company | 1,163.30 | 1,389.85 | 766.65 | 103,276.16 |
| 30 | Power Grid Corp | 195.30 | 216.20 | 173.05 | 102,172.95 |
| 31 | Sun Pharma | 425.80 | 616.50 | 350.40 | 102,163.68 |


Click it and Unblock the Notifications